இரண்டாவது ஆலையை குஜராத்தில் திறக்க ஃபோர்டு முடிவு?

குஜராத்தில் ரூ.6,000 கோடி முதலீட்டில் மாருதி நிறுவனம் பிரம்மாண்ட கார் தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. மேலும், அங்கு ரூ.18,000 கோடி அளவுக்கு மொத்தமாக முதலீடு செய்யவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், ஃபோர்டு நிறுவனமும் குஜராத்தில் கார் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால், குஜாராத்துக்கு ரூ.5,000 கோடி முதலீடும், ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 3 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் வகையில் இந்த புதிய தொழிற்சாலையை கட்டுவதற்கு ஃபோர்டு திட்டமிட்டுள்ளதாகவும், உள்நாட்டு தேவையை நிறைவு செய்வது மட்டுமின்றி, அங்கிருந்து வெளிநாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்யவும் அந்த நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் மாநிலம், சனந்த் நகரிலுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலை அருகிலேயே மாருதி நிறுவனமும் தொழிற்சாலை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய உள்ளது. இதேபோன்று, ஃபோர்டு நிறுவனமும் அந்த பகுதியில் தொழிற்சாலை அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்து வருவதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications








