இன்டர்நெட்டில் அதிகம் தேடப்படும் ஆட்டோ நிறுவனங்களில் மாருதி முதலிடம்- கூகுள்

Google Logo
டெல்லி: இணையதளங்களில் அதிகம் தேடப்படும் ஆட்டோ நிறுவனங்களில், மாருதி நிறுவனம் முதலிடம் வகிப்பதாக கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவின் இணையதள பயன்பாடு குறித்த அறிக்கையை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ஆட்டோமொபைல் துறை குறித்து பிரத்யேக அறிக்கையையும் கூகுள் வெளியிட்டுள்ளது.

அதில், இணையதளங்களில் அதிகம் தேடப்படும் ஆட்டோ நிறுவனங்களில் மாருதி முதலிடம் வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

"இந்திய மக்களால் அதிகம் தேடப்படும் ஆட்டோ நிறுவனங்களில் பட்டியலில் மாருதி முதலிடத்தில் உள்ளது. ஹோண்டா கார் நிறுவனம் இரண்டாம் இடத்திலும், ஹூண்டாய் மூன்றாமிடத்திலும் இருக்கின்றன.

இதற்கடுத்து, ஜெனரல் மோட்டார்ஸ் நான்காவது இடத்திலும், டாடா மோட்டார்ஸ் ஐந்தாவது இடத்திலும் இருக்கின்றன.

டொயோட்டோ, ஃபோர்டு முறையே ஆறாவது மற்றும் ஏழாவது இடத்திலும், வோக்ஸ்வேகன், ஃபியட் முறையே எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடத்திலும் இருக்கின்றன," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூகுள் இந்தியா நிர்வாக இயக்குனர் ராஜன் ஆனந்தன் கூறுகையில்," "கார் மற்றும் பைக் வாங்குபவர்கள் விலை, வாகனத்தின் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை தெரிந்துகொள்வதிலும், ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்வது மற்றும் வாங்குவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் கார், பைக் பற்றிய செய்திகளை அறிந்துகொள்வதற்காக இன்டர்நெட்டை பயன்படுத்துவோரின் சதவீதம் 84 சதவீதம் வரை அதிகரித்து 110 சதவீதமாக பதிவாகி உள்ளது," என்றார்.

Most Read Articles
English summary
Google India Auto Report released the list of most searched automobile companies of the country and the Indian units of major auto giants such as Maruti Suzuki, Honda and Hyundai are dominating the domestic car industry by being the first, second and third most explored firms respectively. According to Google India’s Auto Industry Report, the local auto sector is rapidly moving and Indian consumers are ahead of all in using the internet to research about cars and bikes. Reports further declared that there is tremendous growth witnessed in internet searches, which stands at 110% and 84% increase was encountered in 2009 and 2010 respectively.
Story first published: Thursday, August 11, 2011, 13:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X