புதிய கன்வெர்ட்டிபிள் மாடலை அறிமுகப்படு்த்தியது மெர்சிடிஸ் பென்ஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்கே வரிசையின் மூன்றாம் தலைமுறை மாடலான இந்த கார் எஸ்எல்கே-350 என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது.
ஜெர்மனியிலுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் இந்த கார் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.
3.5 லிட்டர் வி-6 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள இந்த கார் அதிகபட்சமாக 250 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. 272 பிஎச்பி திறனையும், 258 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
இது வெறும் 5.6 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டிவிடும். இந்த புதிய ஸ்போர்ட்ஸ் கார் 9 வண்ணங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்கே-200 காருக்கு மாற்றாக புதிய தலைமுறை அம்சங்களுடன் இந்த காரை பென்ஸ் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
இது அதிக மைலேஜ் கொடுக்கும் வகையில் எஞ்சின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. லிட்டருக்கு இந்த கார் 8 கிமீ செல்லும் என மெர்சிடிஸ் சான்று கூறுகிறது.
வாடிக்கையாளர் தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக 9 வண்ணங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள இந்த கார் டெல்லியி்ல ரூ.61.9 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








