லிமிடேட் எடிசன் இன்னோவா: 1,000 கார்கள் மட்டுமே விற்பனை

இன்னோவா கிறிஸ்ட்டா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய இன்னோவா, பார்த் ஸ்டேஜ்-3 மற்றும் பாரத் ஸ்டேஜ்-4 மாசுக்கட்டுப்பாட்டு விதிகளுக்குட்டப்பட்ட 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்டதாக இரண்டு மாடல்களில் வந்துள்ளது.
வெள்ளை நிறம் கொண்ட புதிய இன்னோவாவின் வெளிப்புறத்தை கிராபிக்ஸ் டிசைன்கள் அழகாக ஊடுருவி அலங்கரிக்கின்றன. பின்பக்க கூரையின் முடிவில் பொருத்தப்பட்டுள்ள ரியர் ரூப் ஸ்பாய்லர் அதன் கம்பீரத்தை கூட்டும் வகையில் இருக்கிறது.
கதவை திறந்து உள்ளே சென்றவுடன் இரட்டை வண்ணத்தில் லெதர் இருக்கைகள் ஜொலிக்கின்றன. டேஷ்போர்டு மரவேலைப்பாடுகளால் கண்ணை கவர்கிறது. புதிய ப்ளோர் மேட்டுகளும் காரின் மதிப்பை உயர்த்துகிறது.
இதுகுறித்து டொயோட்டோ கிர்லோஸ்கர் மார்க்கெட்டிங் பிரிவு துணை நிர்வாக இயக்குனர் சந்தீப் சிங் கூறுகையில், "அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் எம்பிவி கார் செக்மென்டில் இன்னோவா மார்க்கெட் லீடராக இருந்து வருகிறது. நவீன தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த புதிய இன்னோவா கார் வாடிக்கையாளர்களின் அந்தஸ்தை உயர்த்தும் என்பது திண்ணம்," என்றார்.
மொத்தத்தில் 1,000 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கும் புதிய லிமிடேட் எடிசன் இன்னோவா கார் ரூ.13.3 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








