வரும் ஜனவரியில் புதிய 4 சீட்டர் ரேவா எலக்ட்ரிக் கார் அறிமுகம்

Reva NXR
டெல்லி: வரும் ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போவில், 4 பேர் அமர்ந்து செல்லும் வசதி கொண்ட புதிய ரேவா கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்திய சந்தையில் விற்கப்படும் ஒரே ஒரு எலக்ட்ரிக் காரான ரேவா-ஐ, மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாமல் திணறி வருகிறது. சிறிய தோற்றம், அதிக விலை, இரண்டு இருக்கை, அதிக தூரம் செல்லும் வசதி இல்லாதது என பல மைனஸ் பாயிண்டுகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

இந்த நிலையில், ரேவா-ஐ காரிலுள்ள மைனஸ் பாயிண்டுகளை களைந்து, 4 பேர் அமர்ந்து செல்லும் வசதிகொண்ட ரேவா என்எக்ஸ்ஆர் என்ற புதிய எலக்ட்ரிக் காரை மஹிந்திரா ரேவா நிறுவனம் வடிவமைத்து உள்ளது.

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த எலக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெற இருக்கும் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பக்கவாட்டில் இரண்டு கதவுகள் கொண்ட கார் வெளிப்புற மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சில மாதத்திற்குள் என்எக்ஸ்ஆர் எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வர இருக்கிறது. 4 பேர் அமர்ந்து செல்லும் கார் என்பதோடு, விசாலமான இடவசதி, ஒரு முறை சார்ஜ் செய்தால் 160 கிமீ வரை பயணம் என அட்டகாசமான அம்சங்களுடன் என்எக்ஸ்ஆர் வருகிறது.

மேலும், பொருட்கள் வைப்பதற்காக அதிக இடவசதி, அதிகபட்சமாக மணிக்கு 100கிமீ வேகத்தில் செல்லும் திறன் என ஆசையை தூண்டுகிறது புதிய ரேவா என்எக்ஸ்ஆர். மேலும், இந்த கார் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் என்ற இந்திய மக்களின் கைகளுக்கு பொருத்தமான விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிகிறது.

ஏராளமான புதிய வசதிகளுடன் வரும் இந்த கார் நிச்சயமாக மார்க்கெட்டில் புதிய அத்தியாயத்தை எழுதும் என ஆணித்தரமாக கூறலாம்.

Most Read Articles
English summary
Reva, the Indian electric carmaker owned by Mahindra is preparing to launch its NXR electric car early next year. Reports say the Reva NXR could be unveiled during the 2012 Indian Auto Expo. Reva could begin commercial sales of the electric car soon after its launch The NXR will replace the current REVAi. The REVAi despite offering an easy and hassle free driving experience is not such a practical car as it has space for two adults only. Reva has tried to rectify these issues in the NXR by adding two mre adult seats. The NXR will remain a two door car and yet the rear cabin's space has been enhanced to accommodate two people or more luggage. The range has seen a spectacular two fold increase to 160 kilometres due to the improvement in the lead acid batteries.If reports about the NXR's price are true, the electric car could be priced between Rs.4 lakh and Rs.5 lakh.
Story first published: Tuesday, June 19, 2012, 16:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X