டீலர்களில் இருப்பு அதிகரிப்பு: கார்களின் உற்பத்தியை குறைத்தது மாருதி

Maruti Alto K10
டெல்லி: தேவை குறைந்ததால் டீலர்களில் கார்களின் இருப்பு அதிகமாக இருப்பதால், ஆல்ட்டோ உள்பட அனைத்து மாடல் கார்களின் உற்பத்தியையும் மாருதி கணிசமாக குறைத்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் கார் மார்க்கெட்டில் பலத்த வீழ்ச்சி காணப்படுகிறது. பணவீக்கம், பெட்ரோல் விலை உள்ளிட்ட காரணங்களால் கார் விற்பனை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கார் விற்பனை குறைந்து வருகிறது.

இந்த நிலையில், மார்க்கெட்டில் பாதி அளவுக்கு விற்பனையை தன் கைக்குள் வைத்திருக்கும் மாருதியின் கார் விற்பனையும் கணிசமாக குறைந்துவிட்டது. கடந்த மாதம் விற்பனையில் கால் பங்கை இழந்தது மாருதி.

தள்ளுபடி, பரிசு பொருட்கள் என சலுகைகளை அறிவித்தும் புண்ணியம் இல்லை. இந்த நிலையில், கார் விற்பனையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள ஆல்ட்டோ மற்றும் வேகன்-ஆர், ரிட்ஸ் உள்ளிட்ட அனைத்து மாடல் கார்களுக்கான தேவை குறைந்து காணப்படுகிறது.

இதனால், டீலர் பாயிண்டுகளில் கார்களின் இருப்பு அதிகமாக இருக்கிறது. இதையடுத்து, கடந்த மாதம் முதல் கார் உற்பத்தியை தற்காலிகமாக குறைத்துவிட்டது மாருதி. மாதத்திற்கு சராசரியாக 30,000 கார்களுக்கு மேல் விற்பனையாகும் ஆல்ட்டோ காரின் உற்பத்தியும் 5 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், டீசல் மாடல் கார்கள் வழக்கம்போல் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக மாருதியின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான ஷின்ஸோ நகனிஷி கூறினார்.

Most Read Articles
English summary
Given the slump in the automobiles market, Maruti Suzuki has cut production of most models including its bread-winning Alto.The company’s managing director Shinzo Nakanishi admitted that company has scaled down production of all of its cars apart from diesel models during July citing lower demand.
Story first published: Saturday, August 13, 2011, 10:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X