10வது நாளாக நீடிக்கும் மாருதி ஊழியர்கள் ஸ்டிரைக்-உற்பத்தி கடும் பாதிப்பு

Maruti Worker Strike
டெல்லி: மாருதி சுசுகி நிறுவன ஊழியர்கள் மேற்கொண்டு வரும் ஸ்டிரைக் இன்று 10வது நாளை எட்டியது. இதனால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி நிறுவனத்தின் மானேசர் பிரிவு தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டம் 10வது நாளை எட்டியுள்ளது. போராட்டம் இப்போதைக்கு முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகளைக் காணோம்.

இதுகுறித்து நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. அதேசமயம், ஸ்டிரைக்கை விலக்கிக் கொள்ள தொழிலாளர்கள் முன்வரவில்லை. மானேசர் பிரிவில் தற்போது உற்பத்தி முழுமையாக முடங்கிப் போயுள்ளது என்றார்.

இதற்கிடையே இன்று காலை மும்பை பங்குச் சந்தையில் மாருதி நிறுவன பங்குகளின் விலை ரூ. 1215.15 குறைந்தது.

மானேசர் பிரிவில் ஜூன் 4ம் தேதி முதல் 2000 தொழிலாளர்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இதுவரை ரூ. 390 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரிவில் மட்டும் 7800 கார்களின் டெலிவரி பாதிக்கப்பட்டு ஸ்தம்பித்துப் போய் நிற்கிறது.

தங்களது புதிய யூனியனான - மாருதி சுசுகி ஊழியர்கள் சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள்.

Most Read Articles
English summary
The country's largest car-maker Maruti Suzuki India's Manesar facility continues to be completely shut down, with a workers' strike at the plant entering its 10th day today. "The talks are going on, but the strike is still continuing. The production at the plant is stopped," a company spokesperson told. Around 2,000 workers at the plant have been on strike since June 4, resulting in a loss of about Rs 390 crore for the company on account of a 7,800-unit hit in output till Saturday.
Story first published: Monday, June 13, 2011, 15:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X