புதிதாக 400 கார் ஷோரூம்களை திறக்க டாடா மோட்டார்ஸ் திட்டம்

Tata Showroom
டெல்லி: வாடிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமான சேவையை வழங்கும் வகையில், புதிதாக 400 கார் ஷோரூம்களை திறக்க டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

வாகன தயாரிப்பில் ஜாம்பவான திகழும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால், கார் விற்பனையில் எதிர்பார்த்த இலக்கை முடியவில்லை. வர்த்தக வாகன விற்பனை மார்கெட்டில் கோலோய்ச்சி வரும் டாடா, கார் மார்க்கெட்டில் கோட்டை வி்ட்டு வருகிறது.

மேலும், டாடாவின் கார் விற்பனை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த மாதமும் கார் விற்பனை 10 சதவீதத்திற்கும் மேல் குறைந்துவிட்டது. ஏற்கனவே, நல்ல டீலர் அடித்தளத்தை பெற்றிருந்தபோதிலும், அந்த நிறுவனத்தால் எதிர்பார்த்த அளவு விற்பனை இலக்கை எட்ட முடியவில்லை.

இதையடுத்து, வாடிக்கையாளர்களுக்கு சிரமமில்லாமல் அருகிலும், மிக எளிதான சேவை கிடைக்கும் வகையில் தனது டீலர் எண்ணிக்கையை எகிடுதகிடாக அதிகரிக்க டாடா முடிவு செய்துள்ளது.

கார் வாங்கும் முனையும் வாடிக்கையாளர்கள் முதலில் எதிர்பார்ப்பது கூப்பிடு தூரத்தில் ஷோரூம் இருக்கவேண்டும். அது சர்வீஸ் வசதிகொண்டதாக இருக்கவேண்டும் என்பதுதான்.

இந்த கான்செப்படை எடுத்துக்கொண்டு டாடா இந்த முடிவை எடுத்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 250 கார் ஷோரூம்களை கொண்டுள்ள டாடா மேலும், 400 புதிய ஷோரூம்களை திறக்க முடிவெடுத்துள்ளது. இதன்மூலம், டாடா கார் ஷோரூம்களின் எண்ணிக்கை 650ஆக உயரும்.

புதிதாக திறக்கப்படும் ஷோரூம்களில் நானோவுக்கு மட்டும் 300 ஷோரூம்கள், அதுவும் டயர்-3 எனப்படும் 2 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சிறிய நகரங்களில் திறக்கப்பட இருக்கிறது.

Most Read Articles
English summary
Tata Motors, the Indian carmaker has decided to go on a huge expansion spree of its dealerships and showrooms to boost sales. Tata Motors which reported its financial results for the first quarter has stated its sales of passenger cars had declined by 10.7 per cent while commercial vehicle sales continued to raise. In a bid to boost car sales Tata Motors will increase the number of showrooms from 250 to 650 across the country by the end of this year. We had earlier reported that Tata was also planning to set up separate showrooms exclusively for the Nano small car.
Story first published: Saturday, August 13, 2011, 10:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X