இணையதளங்களில் அதிகம் தேடப்பட்ட கார்கள் பட்டியல்: கூகுள் வெளியீடு

Top Searched Cars
டெல்லி: தனது தேடுபொறியில் அதிகம் தேடப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது கூகுள். இதிலும், மாருதியின் ஆல்ட்டோ கார் முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டில் தனது இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட கார் நிறுவனங்களின் பட்டியலை கூகுள் சமீபத்தில் வெளியிட்டது. அதனுடன் சேர்த்து தனது தேடுபொறியில் எந்த கார் அதிக முறை தேடப்பட்டது என்பதன் அடிப்படையில் கார்களை வரிசைப்படுத்தி பட்டியல் வெளியிட்டுள்ளது கூகுள்.

இதில், மாருதி நிறுவனத்தின் ஆல்ட்டோ கார் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மார்க்கெட்டில் வெகு சீக்கிரத்தில் முக்கிய இடம் பிடித்துள்ள ஃபோர்டு நிறுவனத்தின் பிகோ கார் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

ஜெனரல் மோட்டார்ஸ் பீட் கார் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் அழகான ஹேட்ச்பேக் காரான ஐ-10 நான்காவது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

நிசானின் மைக்ரா கார் 5 வது இடத்திலும், மாருதி நிறுவனத்தின் தற்போதைய ஹைவேரியண்ட் காரான கிசாஷி 6 வது இடத்தையும் தனதாக்கிக்கொண்டுள்ளது.

ஹூண்டாய் வெர்னா புளூயிடிக் செடான் கார், டொயோட்டோ எட்டியோஸ், மாருதி எஸ்எக்ஸ்-4 மற்றும் வோக்ஸ்வேகன் போலோ ஆகிய கார்கள் முதல் பத்து இடத்தில் உள்ளதாக கூகுள் அறிக்கை தெரிவிக்கிறது.

கார் வாங்குவதற்கு முன்னதாக மேற்கண்ட கார்களின் தகவல்களை அவர்கள் கூகுள் தேடுபொறி மூலம் பெற்றதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Google, the search engine giant revealed the top 10 most sought after cars in India via a new list. According to the list, Maruti Suzuki Alto, Ford Figo, Chevrolet Beat, Hyundai i10, Nissan Micra, Maruti Kizashi, Hyundai Verna Fluidic, Toyota Etios, Maruti SX4 and Volkswagen Polo are the top ten cars in India, in that order, which are searched on Google by Indians. Increased spending capacity has triggered car purchases among Indian consumers resulting in a booming industry. Indian car buyers are Googling for information about these cars before purchasing. They believe in finding out more information on internet, according to Google India search data.
Story first published: Sunday, August 14, 2011, 10:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X