தரமான கட்டமைப்பு: செவர்லே ஸ்பார்க் காருக்கு விருது

Chevrolet Spark
டெல்லி: கடந்த ஆண்டின் சிறந்த கட்டமைப்பு மற்றும் மதிப்புமி்க்க காருக்கான விருதை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செவர்லே ஸ்பார்க் கார் பெற்றுள்ளது.

ஜேடி பவர்ஸ் என்ற மார்க்கெட்டிங் ஆய்வு நிறுவனம், சிறந்த காம்பெக்ட் கார்கள் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு நடததி தேர்வு செய்யப்படும் கார்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது.

கடந்த ஆண்டுக்கான சிறந்த கார்களை தேர்வு செய்வதற்காக பல்வேறு பிரிவுகளின் கீழ் வாடிக்கையாளர்கள் மற்றும் சந்தையில் ஆய்வு நடத்தி விருதுகளை அறிவித்துள்ளது.

அதில், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செவர்லே ஸ்பார்க் ஹேட்ச்பேக் கார் கடந்த ஆண்டுக்கான சிறந்த அடிப்படை கட்டமைப்பு கொண்ட காராகவும், மதிப்புமி்க்க கார்களின் பிரிவில் விருதுகளை பெற்றுள்ளது.

ஆண்டின் மதிப்புமிக்க காருக்கான விருதை செவர்லே ஸ்பார்க் கார் தொடர்ந்து நான்காவது ஆண்டாக விருதை பெற்றுள்ளது. செவர்லே யுவா கார் பிரிமியம் காம்பெக்ட் பிரிவில் கடந்த ஆண்டின் மதிப்புமிக்க காருக்கான விருதை பெற்றுள்ளது.

இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் துணைத் தலைவர் பாலேந்திரன் கூறுகையில்," ஜேடி பவர்ஸ் விருதுகளை வென்றதன் மூலம், செவர்லே பிராண்டு கார்களின் தரம், மதிப்பு மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றை எளிதாக உணரமுடியும். எதிர்காலத்திலும் எங்களது தயாரிப்புகளில் இதே தரத்தை கடைபிடிப்போம்," என்றார்.

Most Read Articles
English summary
General motors entry level hatchback car chevrolet Spark bagged "Most Dependable Compact Car" and "Best Compact Car in Initial Quality 2010" by the JD Power’s Vehicle Dependability Study for 2010 and India Automotive Quality Study. It is to be mentioned here that this is the fourth consecutive year when Chevrolet Spark has bagged this award.
Story first published: Wednesday, June 15, 2011, 15:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X