விற்பனை சரிவு: சிட்டி கார் விலையை ரூ.66,000 குறைத்தது ஹோண்டா

Honda City
டெல்லி: இந்திய சந்தையின் வெற்றிகரமான கார் மாடல்களில் ஒன்றான ஹோண்டா சிட்டி கார் விலை ரூ.66,000 வரை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

மிட்சைஸ் செடான் ரகத்தை சேர்ந்த ஹோண்டா சிட்டி கார் இந்திய மார்க்கெட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனையில் கொடி கட்டி பறந்தது. விற்பனையில் முதலிடத்தை பிடித்து வைத்திருந்த ஹோண்டா சிட்டி சந்தை போட்டி காரணமாக தனது இடத்தை சமீபத்தில் இழந்தது.

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் ஹோண்டா சிட்டியின் விற்பனை கடும் சரிவை சந்தித்தது. வோக்ஸ்வேகனின் வென்ட்டோ அந்த இடத்தை வெகுசுலமாக பறித்துக்கொண்டது. இதனால், ஹோண்டா நிறுவனம் அதிர்ச்சி அடைந்தது. எப்படியாவது சிட்டியை மீண்டும் முதலிடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று சபதம் எடுத்துக்கொண்டது.

இதற்கான வழிகளை ஆராய்ந்த ஹோண்டா நிறுவனம், சிட்டி விற்பனையை அதிகரிக்க விலை குறைப்பு ஒன்றே சரியான ஆயுதம் என்று முடிவு செய்தது. இதையடுத்து, சிட்டி விலையை தற்போது ரூ.66,000 வரை குறைத்துள்ளது ஹோண்டா.

இதுகுறித்து ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்," உற்பத்தி செலவீனத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இதனால், சிட்டி கார் விலை ரூ.66,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ஹோண்டா சிட்டி கார் ரூ.7.49 லட்சம் முதல் ரூ.9.89 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Most Read Articles
English summary
Honda cars said it has cut the prices of its mid-size sedan City by up to Rs 66,000 after implementing various cost reduction measures. The car will now be available between Rs 7.49 lakh and Rs 9.89 lakh (ex-showroom, Delhi), Honda said in a statement.
Story first published: Wednesday, June 15, 2011, 11:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X