சலுகை கொடுத்தால் பிராண்டு பெயர் போயிடும்-பிஎம்டபிள்யூ

BMW Car
புனே: விற்பனையை அதிகரிப்பதற்காக சலுகைகளை வழங்கினால், பிராண்டுக்கு இருக்கும் மதிப்பு போய்விடும்," என பிஎம்டபிள்யூ தலைவர் ஆன்ட்ரியாஸ் சாப் கூறினார்.

கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த மாதம் கார் விற்பனை மந்தமடைந்துள்ளது. இதனால், பல முன்னணி நிறுவனங்கள் கார் விற்பனையை அதிகரிக்க கடந்த சில நாட்கோளாக தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில், புனேயில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய ஷோரூம் திறப்பு விழா நடந்தது. இதில், பிஎம்டபிள்யூ இந்தியா தலைவர் ஆன்ட்ரியாஸ் சாப் கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய அவர் கூறியதாவது:

"டீலர்களின் எண்ணி்க்கையை அதிக அளவில் அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். 2012ம் ஆண்டுக்குள் புதிதாக 40 டீலர்களை திறக்க திட்டமிட்டுள்ளோம்.

வரும் அக்டோபர் மாதம் முதல் யூஸ்டு கார் விற்பனையை தொடங்க திட்டமிட்டுள்ளோம். கார் விற்பனையை அதிகரிக்க குரூப் புக்கிங் போன்றவற்றிற்கு சலுகைகளை வழங்கமாட்டோம்.

அதுபோன்ற சலுகைகள் பிராண்டு பெயரை கெடுத்துவிடும்," என்று கூறினார்.

Most Read Articles
English summary
BMW India, the largest luxury car maker in the Indian market, on Wednesday stated that it is mulling over the option of entering into the used-car business in the Indian market.
Story first published: Thursday, June 16, 2011, 11:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X