கார்களுக்கு விதிக்கப்படும் கலால் வரியால் அரசுக்கு ரூ.5,001 கோடி வருவாய்

Car Market
டெல்லி: கடந்த நிதி ஆண்டில் கார்கள் மீது விதிக்கப்படும் கலால் வரியால் மத்திய அரசுக்கு ரூ.5,001 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

கார்கள் மீது விதிக்கப்படும் கலால் வரியால் அரசுக்கு கிடைத்த வருவாய் விபரங்கள் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்து பேசிய மத்திய கனரக தொழிற்துறை அமைச்சர் பிரபுல் பட்டெல் கூறியதாவது:

"கடந்த 2010-11ம் நிதி ஆண்டில் கார் விற்பனை 30 சதவீதம் அதிகரித்தது. இதனால், அரசுக்கு கிடைத்த வரிவருவாயும் கணிசமாக உயர்ந்தது.

கடந்த நிதி ஆண்டில் கார்களுக்கு விதிக்கப்பட்ட கலால் வரியால் அரசுக்கு ரூ.5,001 கோடி வருவாய் கிடைத்தது.

அதற்கு முந்தைய நிதி ஆண்டில் அரசுக்கு ரூ.3,958 கோடி வருவாயாக கிடைத்தது. இதை ஒப்பிடுகையில், கடந்த நிதி ஆண்டில் அரசுக்கு கிடைத்த வருவாய் அளவு 26 சதவீதம் அதிகம்.

தற்போது சிறிய கார்களுக்கு 10 சதவீத கலால் வரியும், பெரிய மற்றும் சொகுசு கார்களுக்கு 22 சதவீத கலால் வரியும் விதிக்கப்படுகிறது," என்று கூறினார்.

Most Read Articles
English summary

 The rapid growth of the domestic car market is turning out to be a money-spinner for the Government. The contribution of the sector in the form of excise duty in 2010-11 went up 26 per cent. According to a reply in Parliament by the Union Minister for Heavy Industries, Mr Praful Patel, the Government collected Rs 5,001 crore from the sector as excise duty in the previous fiscal, up from Rs 3,958 crore in 2009-10.
Story first published: Wednesday, August 17, 2011, 14:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X