சார்ஜ் போட்டு தான் யூஸ் பண்ணனும் என்றாலும் இத்தனை கஸ்டமர்ஸா... ஒரே வருஷத்தில் ஷாக் கொடுத்த மஹிந்திரா!!

எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) சந்தை இந்தியாவில் மிகவும் மெதுவாகவே வளர்ச்சி கண்டு வருகிறது. எந்த அளவிற்கு மெதுவாக என்பதற்கு சாட்சியாக, கடந்த 2026 பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை அதிகம் விற்பனை செய்த நிறுவனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. வஹான் (VAHAN) இணையத்தளம் வாயிலாக கிடைத்துள்ள இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம். வாங்க செய்திக்குள் போகலாம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் இறங்கிவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) சமீபத்தில்தான் இ-விட்டாரா (e-Vitara) என்கிற அதன் முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ததை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

top electric car selling brand

இருப்பினும், டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தான் ஆரம்பத்தில் இருந்து எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முன்னிலையில் இருந்து வருகிறது. கடந்த மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 5,558 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளதாக அரசாங்கத்தின் வஹான் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 2025 பிப்ரவரியில் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்த எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கையை விட 39% அதிகமாகும்.

ஏனெனில், 2025 பிப்ரவரியில் 4,002 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது. டாடாவுக்கு அடுத்து இந்த வரிசையில் 2வது இடத்தில் ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) உள்ளது. எம்ஜி பிராண்டில் இருந்து கடந்த மாதத்தில் 3,310 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

top electric car selling brand

எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸை எம்ஜி கிட்டத்தட்ட நெருங்கிவிட்டதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால், 2025 பிப்ரவரியை விட எம்ஜி எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை 5% குறைந்துள்ளது. ஏனெனில், அந்த மாதத்தில் 3,489 எலெக்ட்ரிக் கார்களை எம்ஜி விற்பனை செய்திருந்தது. எம்ஜி எலெக்ட்ரிக் கார்களின் இந்த சிறிய விற்பனை சரிவுக்கு காரணம், மஹிந்திரா (Mahindra) ஆகும்.

ஏனெனில், 2025 பிப்ரவரியில் வெறும் 508 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்த மஹிந்திரா இந்த ஆண்டு பிப்ரவரியில் சுமார் 2,913 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த வகையில் பார்த்தால், மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை சுமார் 473% அதிகரித்துள்ளது. மஹிந்திராவுக்கு அடுத்து 4வது இடத்தில் புதிய கார் பிராண்டான வின்ஃபாஸ்ட் (VinFast) உள்ளது.

Carmaker February 2026 sales February 2025 sales YoY change
Tata Motors 5,558 4,002 +39%
MG 3,310 3,489 -5%
Mahindra 2,913 508 +473%
VinFast 384 - -
BYD 306 278 +10%
Hyundai 304 775 -61%
Kia 295 22 +1,241%
BMW 245 239 +3%
Maruti Suzuki 214 - -
Mercedes-Benz 65 72 -10%
Tesla 29 - -
Volvo 25 24 +4%
Stellantis 13 60 -78%
Porsche 3 2 +50%
Rolls-Royce 3 1 +200%
JLR 2 0 -
Audi - 7 -
Total 13,669 9,479 +44%

Table Source: VAHAN Portal

ஆனால், மஹிந்திராவுக்கும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கும் இடையே எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் பெரிய வித்தியாசம் உள்ளது. வின்ஃபாஸ்ட்டில் இருந்து கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை 384 ஆகும். இதற்கடுத்து 5வது மற்றும் 6வது இடங்களில் கிட்டத்தட்ட ஒரே அளவிலான விற்பனை எண்ணிக்கைகள் உடன் பிஒய்டி (BYD), ஹூண்டாய் (Hyundai) நிறுவனங்கள் உள்ளன.

இவை இரண்டின் கடந்த பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 306 மற்றும் 304 ஆகும். கியா (Kia) 295 எலெக்ட்ரிக் கார்களையும், பி.எம்.டபிள்யூ (BMW) 245 எலெக்ட்ரிக் கார்களையும், மாருதி சுஸுகி (Maruti Suzuki) 214 எலெக்ட்ரிக் கார்களையும் மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) 65 எலெக்ட்ரிக் கார்களையும் விற்பனை செய்து இதற்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த 2026 பிப்ரவரி மாத விற்பனையின்படி பார்க்கும்போது, டாடா மோட்டார்ஸ, எம்ஜி மோட்டார், மஹிந்திரா நிறுவனங்கள் தான் தற்போதைக்கு எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் பெரிய வித்தியாசங்கள் உடன் முன்னிலையில் உள்ளன. குறிப்பாக, மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்களை வரும் மாதங்களில் அதிக பேர் வாங்குவர் என எதிர்பார்க்கிறோம். இந்த லிஸ்ட்டில் இன்னும் என்னென்ன மாற்றங்கள் இருக்க போகின்றன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 3, 2026, 13:48 [IST]
English summary
Tata motors leads as most electric car selling brand in india as per 2026 february sales
மேலும்... #electric car #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+