டாடா கார்கள் தானேனு இனி யாரும் சாதாரணமா சொல்ல முடியாது! வர்ற கஸ்டமர்ஸ் எல்லாரும் கேட்கும் கார் மாடல்!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் கார்களை கடந்த சில மாதங்களாக அதிக பேர் வாங்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக, டாடாவின் நெக்ஸான் (Nexon) மற்றும் பன்ச் (Punch) கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இது கடந்த 2026 பிப்ரவரி மாத விற்பனையிலும் தொடர்ந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் விற்பனையான காராக டாடா நெக்ஸான் முதலிடத்தை பிடித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எஸ்யூவி ரக காரான நெக்ஸான் கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 19 ஆயிரத்து 430 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2025ஆம் ஆண்டில் இதே பிப்ரவரி மாதத்தில் 15 ஆயிரத்து 349 நெக்ஸான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, நெக்ஸான் கார்கள் 27%, அதாவது 4,081 யூனிட்கள் இந்த பிப்ரவரி மாதத்தில் அதிகமாக விற்பனையாகி உள்ளன.

பெரும்பாலும் ஒரு மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனையான காராக மாருதி சுஸுகி (Maruti Suzuki) கார்களுள் ஒன்று முதலிடம் இடம்பிடிப்பதே வழக்கம். ஆனால், கடந்த பிப்ரவரி மாதத்தில் டாடா நெக்ஸான் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கடுத்து 2வது இடத்தில் மாருதி சுஸுகியின் டிசைர் (Dzire) என்கிற செடான் கார் உள்ளது.
கடந்த மாதத்தில் மொத்தம் 19,326 டிசைர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2025 பிப்ரவரியில் 14,694 டிசைர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதனுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு பிப்ரவரியை காட்டிலும் இந்த ஆண்டு பிப்ரவரியில் 4,632 டிசைர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதற்கடுத்து 3வது இடத்தில் மீண்டும் டாடா காராக பன்ச் 18,748 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. 2025 பிப்ரவரியில் விற்பனை செய்யப்பட்ட பன்ச் கார்களின் எண்ணிக்கை 14,559 ஆகும். இந்த வகையில், டாடா பன்ச் கார்களின் விற்பனை 29% அதிகரித்துள்ளது. 4வது இடத்தில், கடந்த மாதத்தில் அதிக விற்பனையான ஹூண்டாய் (Hyundai) காரான கிரெட்டா (Creta) உள்ளது.
2025 பிப்ரவரியில் 16,317 கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் 10% அதிகமாக 17,938 கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்து இந்த லிஸ்ட்டில் 5வது, 6வது, 7வது மற்றும் 8வது இடங்களில் பிரெஸ்ஸா (Brezza), எர்டிகா (Ertiga), வேகன்ஆர் (WagonR), ஸ்விஃப்ட் (Swift) என மாருதி சுஸுகி கார்கள் ஆக்கிரமித்துள்ளன.
| Model | Feb'26 | Feb'25 | Y-o-Y |
| Tata Nexon | 19,430 | 15,349 | 27% |
| Maruti Suzuki Dzire | 19,326 | 14,694 | 32% |
| Tata Punch | 18,748 | 14,559 | 29% |
| Hyundai Creta | 17,938 | 16,317 | 10% |
| Maruti Suzuki Brezza | 17,863 | 15,392 | 16% |
| Maruti Suzuki Ertiga | 17,807 | 14,868 | 20% |
| Maruti Suzuki Wagon R | 14,885 | 19,879 | -25% |
| Maruti Suzuki Swift | 14,833 | 16,269 | -9% |
| Mahindra Scorpio | 14,665 | 13,618 | 8% |
| Maruti Suzuki Baleno | 14,632 | 15,480 | -5% |
இவற்றின் கடந்த பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 17863, 17807, 14885 மற்றும் 14833 ஆகும். அதுவே, இவற்றின் கடந்த 2025 பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கைகள் 15392, 14868, 19879 மற்றும் 16269 ஆகும். அதாவது, இதில் பிரெஸ்ஸா மற்றும் எர்டிகா கார்கள் 2025 பிப்ரவரியை விட இந்த 2026 பிப்ரவரியில் அதிகமாக விற்பனையாகி உள்ள நிலையில், வேகன்ஆர் மற்றும் ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதிலிலும் குறிப்பாக, 2025 பிப்ரவரியில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகி முதலிடத்தை பிடித்திருந்த வேகன்ஆர் இந்த முறை 7வது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி இரு இடங்களில் மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) மற்றும் மாருதி சுஸுகி பலேனோ (Baleno) கார்கள் முறையே கடந்த மாதத்தின் 14,665 மற்றும் 14,632 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாகவே, இவ்வாறான டாப்-10 லிஸ்ட்டில் மாருதி சுஸுகி கார்கள் அதிக இடங்களை பிடிப்பது வழக்கம். அது கடந்த பிப்ரவரி மாதத்திலும் தொடர்ந்துள்ளது என்றாலும், முதல் 5 இடங்களில் இரு மாருதி சுஸுகி கார்கள் மட்டுமே உள்ளன. டாடா நெக்ஸான் மற்றும் பன்ச் கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவது மாருதி சுஸுகி கார்களுக்கு சற்று சரிவாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








