சென்னை ஆலையில் மூன்று ஷிப்டுகளில் கார் உற்பத்தி- ரினால்ட்

Renault Logo
சென்னை: சென்னை ஓரகடத்திலுள்ள ரினால்ட்- நிசான் ஆலையில் மூன்றாவது ஷிப்டில் கார் உற்பத்தி விரைவில் துவங்க இருக்கிறது.

சென்னை அருகே ஓரகடத்தில் பிரான்சை சேர்ந்த ரினால்ட் மற்றும் ஜப்பானை சேர்ந்த நிசான் நிறுவனங்கள் கட்டிய பிரம்மாண்ட கார் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது.

ரூ.4,500 கோடி முதலீட்டில் இரு நிறுவனங்களும் இணைந்து கட்டியுள்ள இந்த ஆலையில் ஆண்டுக்கு அதிகப்பட்சம் 4 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும்.

இந்த ஆலையில், ரினால்ட் மற்றும் நிசான் நிறுவனங்களின் கார் தயாரிப்பு ஒருங்கே நடந்து வருகிறது. தற்போது இரண்டு ஷிப்டுகளில் இங்கு கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், விரைவில் மூன்றாவது ஷிப்ட் கார் உற்பத்தியும் இந்த ஆலையில் தொடங்க ரினால்ட் மற்றும் நிசான் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இதுகுறித்து ரினால்ட் மேலாண் இயக்குனர் மார்க் நசீப் கூறுகையில்," அடுத்த வாரம் முதல் மூன்றாவது ஷிப்டில் கார் உற்பத்தியை துவங்க இருக்கிறோம். இதன்மூலம், ஆண்டுக்கு 2 லட்சம் கார்களை உற்பத்தி செய்யப்படும். தேவைக்கேற்ப இந்த ஆலையில் கார் உற்பத்தி அதிகரிக்கப்படும்," என்றார்.

Most Read Articles
English summary
Renault-Nissan alliance in India is ready to start its third shift of manufacturing at their Oragadam plant in Chennai. The initiated plan is set with an objective to enhance the production capacity of the duo in the Indian auto market, as mentioned by senior official from the company.
Story first published: Friday, June 17, 2011, 12:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X