இந்த ஆண்டு 40,000 மைக்ரா கார்களை விற்க நிசான் இலக்கு

Nissan Micra
சென்னை: சென்னை ஆலையில் மைக்ராவின் உற்பத்தியை கணிசமாக உயர்த்திய கையோடு, இந்த ஆண்டு உள்நாட்டு சந்தையில் 40, 000 மைக்ரா கார்களை விற்பனை செய்யவும் இலக்கு நிர்ணயித்துள்ளது நிசான்.

கடந்த ஆண்டு 6,500 மைக்ரா கார்களை நிசான் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள ஆலையில் மைக்ராவின் உற்பத்தியை வெகுவாக அதிகரித்துள்ளது நிசான்.

இதற்காக, அடுத்த வாரம் முதல் மூன்றாவது ஷிப்டும் துவங்கப்பட உள்ளது.

மேலும், இந்த ஆண்டு 40, 000 கார்களை விற்க இலக்கு நிர்ணயித்து, அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது நிசான்.

தவிர, இந்த ஆண்டு இறுதியில் புத்தம் புதிய செடான் காரையும் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாலும், நிசான் ஆலையில் கார் உற்பத்தி சூடுபிடித்துள்ளது.

Most Read Articles
English summary
Nissan has ramped up its production capacity of 'Micra' at its Chennai plant and set target to sell 40,000 Micras in the domestic market in 2011 against 6,500 units sold in 2010.
Story first published: Tuesday, June 21, 2011, 11:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X