சென்னையில் ரினால்ட் புளூயன்ஸ் அறிமுகம்

Renault Fluence
சென்னை: அண்ணாசாலையில் திறக்கப்பட்டுள்ள புதிய ஷோரூமில் புளூயன்ஸ் காரை ரினால்ட் அறிமுகம் செய்துள்ளது.

மஹிந்திராவிடமிருந்து பிரிந்த பிறகு, இந்திய சந்தையில் தனித்து களமிறங்கியுள்ள ரினால்ட் நிறுவனம், தனது முதல் அறிமுகமாக புத்தம் புதிய புளூயன்ஸ் காரை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் புதிய ஷோரூம்களை திறந்து வரும் அந்த நிறுவனம், அதில் முதலாவதாக தனது புத்தம் புதிய புளூயன்ஸ் காரை அறிமுகம் செய்து வருகிறது.

சென்னை அண்ணாசலையில் திறக்கப்பட்டுள்ள 'ரினால்ட் மவண்ட்ரோடு' புதிய ஷோரூமில் தனது புளூயன்ஸ் காரை ரினால்ட் அறிமுகம் செய்துள்ளது.

2.0 லிட்டர் எஞ்சினுடன் பெட்ரோல் மாடலும், 1.5 லிட்டர் எஞ்சினுடன் டீசல் மாடலும் கொண்ட புளூயன்ஸ் கார்கள் சென்னை ஷோரூமில் விற்பனைக்கு தயாராக உள்ளது.

சென்னையில் புளூயன்ஸ் அறிமுக விழாவில் பேசிய ரினால்ட் மேலாண் இயக்குனர் மார்க் நசீப் கூறியதாவது:

" பிரேசில், ரஷ்யாவுக்கு அடுத்து மூன்றாவதாக இந்திய மார்க்கெட் எங்களுக்கு முக்கிய மார்க்கெட்டாக கருதுகிறோம். இந்த கார் எங்களது முதலாவது இந்திய தயாரிப்பு என்பதில் பெருமை கொள்கிறோம்.

நாட்டின் முக்கிய கார் சந்தைகளில் சென்னை முக்கிய இடத்தை பிடித்துள்ளது. எங்களது புளூயன்ஸ் காரும் சென்னை செடான் கார் மார்க்கெட்டில் விரைவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடிக்கும் என்று கருதுகிறோம்.

தற்போது புளூயன்ஸ் காருக்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் உதிரிபாகங்களை இறக்குமதி செய்து வருகிறோம். போகப்போக புளூயன்சுக்கான பாகங்களை உள்நாட்டு சந்தையில் பெற திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

பெட்ரோல் மாடல் ரூ. 14.40 லட்சம் விலையிலும், டீசல் மாடல் ரூ.12.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் சென்னையில் புளூயன்ஸ் விற்பனை செய்யப்படும் என ஷோரூம் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Most Read Articles
English summary
Renault India has opened new show room and unviels brand new Fluence sedan car in Chennai. The petrol version of Fluence priced Rs.14.40 lakh and Diesel version is priced.12.99 lakh (ex-showroom Chennai).
Story first published: Tuesday, June 21, 2011, 12:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X