எல்இடி பல்புகளுக்கு பதில் பிஎம்டபிள்யூ கார்களில் இனி லேசர் ஹெட்லைட்

BMW Laser Headlights
தனது சொகுசு கார்களில் எல்இடி ஹெட்லைட்டுகளுக்கு பதிலாக புதிய லேசர் ஹெட்லைட்டுகளை பொருத்தி மார்க்கெட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறது பிஎம்டபிள்யூ.

சர்வதேச அளவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் பெரும்பாலான கார்களில் எல்இடி ஹெட்லைட்டுகளே இடம்பெற்றிருக்கின்றன.

இந்த நிலையில், புதிய தொழில்நுட்பத்தை முன்னணி வகிக்கும் பிஎம்டபிள்யூ நிறுவனம் தற்போது கார்களுக்கான புதிய லேசர் ஹெட்லைட் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது.

சாதாரணமாக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் எல்இடி ஹெட்லைட்டுகளைவிட இந்த புதிய லேசர் ஹெட்லைட்டுகள் 1,000 மடங்கு பிரகாசத்தை வாரி இறைக்க வல்லது. மேலும், அதிக மின்சிக்கனத்தையும் தரும்.

அதேவேளையில், கார் ஓட்டுபவருக்கும், எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கும் கண்களில் கூச்சத்தை ஏற்படுத்தாது என்பதுதான் இதன் முக்கிய விசேஷம். இந்த புதிய லேசர் ஹைட்லைட் தற்போது ஐ-8 கான்செப்ட் பொருத்தியுள்ளது பிஎம்டபிள்யூ.

இதைத்தொடர்ந்து, தனது கார் மாடல்களில் எல்இடி ஹெட்லைட்டுகளுக்கு பதிலாக புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்ப்பட்டுள்ள லேசர் ஹெட்லைட்டுகளை பொருத்தி அறிமுகம் செய்ய பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
German luxury car maker BMW to introduce new laser beam headlights in i8 concept car soon. The new technology Laser beam headlights 1,000 times brighter than LED headligths commonly used today. The next generation Laser Headlights will replaced the LED headlights.
Story first published: Sunday, September 25, 2011, 12:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X