30,000 சிபிஆர் 250ஆர் பைக்குகளை விற்க ஹோண்டா இலக்கு

Honda CBR250R
சென்னை: அனல் பறக்கும் ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில், சமீபத்திய வரவு ஹோண்டாவின் சிபிஆர் 250ஆர்.

இந்திய, தாய்லாந்து சந்தைக்கென ஹோண்டா பிரத்யேகமாக தயாரித்து விற்பனைக்கு வந்துள்ள இந்த பைக் சென்னை வர்த்தக மையத்தில் நடந்து வரும் மோட்டார் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

பைக்கை அறிமுகம் செய்து வைத்த பின்னர் பேசிய ஹோண்டாவின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவு தலைவர் என்.கே. ரத்தன் கூறியதாவது:

" முதல் ஆண்டில் 30,000 சிபிஆர் 250ஆர் பைக்குகளை விற்க திட்டமிட்டுள்ளோம். இந்த பைக் இரண்டு மாடல்களில் அறிமுகம் செய்துள்ளோம்.

ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம்(ஏபிஎஸ்) மற்றும் டிஸ்க் பிரேக் மாடல்களில் இந்த பைக் விற்பனைக்கு வருகிறது.

ஏபிஎஸ் தொழில்நுட்பம் கொண்ட சிபிஆர் 250ஆர் பைக்குக்கு ரூ. 1.70 லட்சமும், டிஸ்க் பிரேக் மாடல் பைக்குக்கு ரூ.1.45 லட்சமும் சென்னையில் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு்ள்ளது.

நாடு முழுவதும் உள்ள 430 ஷோரூம்களில் இந்த பைக் வி்ற்பனைக்கு வந்துள்ளது," என்றார்.

Most Read Articles
English summary
Honda Motorcyle and Scooters today said they are targeting to sell 30,000 units of its latest 250 cc global sports bike CBR-250R in India in the first year
Story first published: Saturday, June 25, 2011, 10:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X