இந்தியாவுக்காக சிறிய ஹேட்ச்பேக் கார்: ஃபோர்டு முடிவு

Ford Small Car
சென்னை: இந்திய வாடிக்கையாளர்கள் மனங்குளிரும் வகையில், ரூ..3 லட்சம் முதல் ரூ.4 லட்சத்திற்குள் விலை கொண்ட புதிய காரை ஃபோர்டு அறிமுகப்படுத்த உள்ளது.

ஃபோர்டு வரலாற்றிலேயே இந்த கார்தான் அந்த நிறுவனத்தின் விலை குறைந்த காராக இருக்கும்.

இந்த சிறிய ரக ஹேட்ச்பேக் கார் குஜராத்தில் கட்டப்பட இருக்கும் புதிய தொழிற்சாலையில் உற்பத்தி செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மாருதி ஏ-ஸ்டார் மற்றும் ஹூண்டாய் ஐ-10 கார்களுக்கு போட்டியை கொடுக்கும் வகையில், வடிவமைப்பு மற்றும் வசதிகளை இந்த கார் பெற்றிருக்கும்.

வரும் 2014ம் ஆண்டு மார்க்கெட்டில் இந்த சிறிய கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இதனிடையே, புதிய ஆலை அமைக்க குஜராத் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள ஃபோர்டு நிறுவனம், சனந்த் பகுதியில் அமைந்துள்ள நானோ கார் தொழிற்சாலை அருகே தனது புதிய தொழிற்சாலையை கட்டுவதற்கான திட்ட வரையறைகளை செய்து வருகிறது.

இந்த பணிகள் முடிந்து புதிய ஆலையை நிர்மானிக்கும் பணிகள் துவங்கும் என ஃபோர்டு தெரிவித்துள்ளது.

மேலும். இந்த ஆலையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பியஸ்ட்டா காரையும் உற்பத்தி செய்ய ஃபோர்டு திட்டமிட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய தட்பவெப்பம், சாலை நிலைகளுக்கேற்ப வடிவமைக்கப்படுவதால், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை இந்த கார் எளிதில் நிறைவேற்றும் என்று ஃபோர்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
Ford Motor, the American carmaker has announced plans to develop a new global small car in India. This new small car could be built in Ford's new manufacturing plant being built in Sanand Gujarat. Ford's new small car is aimed at the Maruti Suzuki A-Star and Hyundai i10. This will Ford's cheapest car in its entire history.Ford's new small car is expected to hit Indian roads by 2014 with a price tag between Rs.3 lakhs and Rs.4 lakhs. It will be positioned below Ford's current entry level small car, the Figo.
Story first published: Friday, August 26, 2011, 11:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X