பறக்கும் காரை வாங்கிய முதல் இந்திய தொழிலதிபர்

Flying Car
ஆமதாபாத்: வர்த்தக ரீதியிலான உலகின் முதல் பறக்கும் காரை ஆமதாபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வாங்கியுள்ளார். அடுத்த ஆண்டு இந்த பறக்கும் கார் அவருக்கு டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆமதாபாத்தை சேர்ந்த சுபாஷ் சிகோரா பிரிட்டனிலுள்ள 2 லட்சம் கோடி மதிப்புடைய யூரோக் கன்சல்டன்சி நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளார். இவர் அமெரிக்காவை சேர்ந்த மாசாசூட்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து வர்த்தக ரீதியிலான டிரான்சிஷன் என்ற முதல் பறக்கும் காரை வாங்கியுள்ளார்.

கடந்த 2009 ம் ஆண்டு ரூ.ஒரு கோடி அட்வான்ஸ் கொடுத்து இந்த பறக்கும் காரை புக்கிங் செய்தார். இந்த நிலையில், பறக்கும் காருக்கான சோதன ஓட்டங்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதால், அதற்கு அமெரி்கக விமான போக்குவரத்து ஆணையம் வர்த்தக ரீதியில் பறக்கும் காரை விற்பனை செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

இரண்டு பேர் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பறக்கும் காரில் சாலையிலும், ஆகாயத்திலும் மாறி மாறி செல்ல முடியும். 450 மைல் தூரம் வரை செல்லும் வசதிகொண்ட இந்த பறக்கும் கார் மணிக்கு 115 மைல் வேகத்தில் செல்லும் திறன் படைத்தது.

வர்த்தக ரீதியில் விற்பனைக்கு வரவுள்ள இந்த முதல் பறக்கும் காரை வாங்கியுள்ள சுபாஷ் சிகோரா அதை டெஸ்ட் டிரைவும் செய்துவிட்டார். பறக்கும் காரில் பயணம் செய்த அனுபவம் குறித்து அவர் கூறுகையில்," ஒரு பட்டனை தட்டினால் போதும், திடீரென மடங்கி இருக்கும் இறக்கைகளை விரித்து, ஹெலிகாப்டர் போன்று மாறிவிடுகிறது. இதை ஓட்டியது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்,"என்றார்

ஆமதாபாத் ஆர்.ஜி. சாலையில் உள்ள தனது பண்ணை வீட்டில் இந்த பறக்கும் காரை நிறுத்த முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த பறக்கும் காரை எங்கு வேண்டுமானாலும் ஓட்டும் வசதி உள்ளதால், பாதுகாப்பு பிரச்னைகள் இருப்பதாக மத்திய விமான போக்குவரத்து ஆணைய அதிகாரி ஒருவர் கூறினார்.

இருப்பினும், பறக்கும் காரை ஓட்டுவதற்கு எப்படியும் அனுமதி வாங்கிவிடுவேன் என சுபாஷ் சிகோரா நம்பிக்கையுடன் கூறினார். இந்த காரின் மொத்த விலை ரூ.2 கோடியாகும். இந்தியா வரும்போது வரி உள்பட ரூ.6 கோடி ஆகும் என சுபாஷ் தெரிவித்தார். அடுத்த ஆண்டு இந்த பறக்கும் கார் சுபாஷுக்கு டெலிவிரி கொடுக்கப்பட இருப்பதாக மாசாசூட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Subhash Shihora, a major stake-holder in the Rs 2 lakh crore Urok consultancy firm in the UK, the first Indian to buy the world's first commercial flying car called 'Transition' from a company in Massachusetts, US.
Story first published: Saturday, May 14, 2011, 15:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X