இந்தியாவில் ஏ6 பிரிமியம் கார் உற்பத்தியை துவங்கியது 'ஆடி'

Audi A6
அவுரங்காபாத்: இந்தியாவில் தனது புதிய ஏ6 பிரிமியம் செடான் காரின் உற்பத்தியை ஆடி நிறுவனம் துவங்கியுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த ஆடி கார் நிறுவனம் சொகுசு கார் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்குகிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் குஜராத் மாநிலம், அவுரங்காபாத்தில் தொழிற்சாலை அமைத்து கார் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த தொழிற்சாலையில் தற்போது ஏ4 பிரிமியம் செடான் கார் மற்றும் க்யூ5 எஸ்யூவீ கார்களை ஆடி நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில், தனது ஏ6 பிரிமியம் காரின் மேம்படுத்த மாடலின் உற்பத்தியையும் இங்கு துவங்கியுள்ளது ஆடி.

இதுகுறித்து ஆடி இந்தியா நிறுவன தலைவர் மைக்கேல் பெர்சகே கூறியதாவது:

" இந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் புதிய ஏ6 காரின் உற்பத்தி அவுரங்காபாத் தொழிற்சாலையில் துவங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 2,000 ஏ6 கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் அறிமுகம் செய்ய இருக்கிறோம்.

கடந்த ஆண்டு மொத்தமாக 2,466 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு 4,500 கார்களை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளோம். மேலும், அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 6,000 கார்களை அவுரங்காபாத் தொழிற்சாலையிலிருந்து தயாரிக்க திட்டம் வைத்துள்ளோம்," என்று கூறினார்.

Most Read Articles
English summary
Audi India has announced the start of production of the all-new Audi A6 in India from its Aurangabad facility. More than 2,000 units of the Audi A6 will run off the production line every year, in the initial years from this facility.
Story first published: Friday, June 10, 2011, 14:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X