உலகின் டாப்-10 மீது குறிவைக்கும் அப்போலோ டயர்ஸ்

Apollo Tyres
துபாய்: அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் டாப்-10 நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற திட்டமிட்டுள்ளதாக அப்போலோ டயர்ஸ் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் டயர் தயாரிப்பில் புகழ்பெற்ற இந்தியாவின் அப்போலோ டயர்ஸ் நிறுவனம், உலக அளவில் தற்போது 17வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், அந்த நிறுவனம் தற்போது உள்நாடு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் மிகப்பெரிய விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தை சேர்த்து அந்த நிறுவனத்தின் மொத்த வர்த்தகம் தற்போது ரூ.9,000 கோடியாக உள்ளது. இதை அடுத்த 5 ஆண்டுகளில் மும்மடங்காக (ரூ.27,000 கோடி) உயர்த்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம், இன்னும் சில ஆண்டுகளுக்குள்ளேயே உலகின் முதல் 10 இடத்திற்குள் வரமுடியும் என்று அந்த நிறுவனம் கருதுகிறது.

இதுகுறித்து அப்போலோ டயர்ஸ் நிறுவனத்தின் இந்திய நிர்வாக அதிகாரி சதீஷ் ஷர்மா கூறியதாவது:

"டயர் தயாரிப்பில் உலகின் முதல் 10 நிறுவனங்களில் ஒன்றாக இடம்பெறும் வகையில், தற்போது திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதற்காக, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். குறிப்பாக, அரபு நாடுகளில் வர்த்தகத்தை பன்மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.

இந்தியாவில் தற்போது ரூ.5,400 கோடியாக உள்ள வர்த்தகத்தை அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.16,200 கோடியாகவும், வெளிநாட்டு வர்த்தகத்தை ரூ.10,800 கோடியாகவும் உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம், வரும் 2015ம் ஆண்டிற்குள் எங்களது டாப்-10 இலக்கை அடைய முடியும் என்று நம்புகிறோம்," என்று கூறினார்.

Most Read Articles
English summary
Apollo Tyres is planning big. Having grown into Rs.9,000 crore company in 35 years since inception in 1976, India's largest tyre maker now plans to grow three times to Rs.27,000 crore in the next five years. The aim is to break into the global top 10 tyre companies. Apollo is reportedly ranked seventeenth now.
Story first published: Sunday, June 12, 2011, 13:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X