சோதனை நிலைகளில் லிட்டருக்கு 24 கி.மீ. செல்லும் பீட்

Chevrolet Beat
டெல்லி: கார் மார்க்கெட்டின் ஹாட் டாபிக், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செவர்லே பீட் டீசல் கார் பற்றிதான். கைக்குக்கு எட்டும் விலையில் நம்பர் ஒன் பில்டு குவாலிட்டி கொண்ட காராக வலம் வரும் பீட்டின் டீசல் காரை விரைவில் அறிமுகப்படுத்துவதற்கான ஆயத்தங்களை ஜெனரல் மோட்டார்ஸ் மேற்க்கொண்டுள்ளது.

இந்த நிலையில், டீசல் பீட் கார் பற்றி பல்வேறு புதிய தகவல்கள் கசிந்துள்ளன. இதோ உங்களுக்காக அந்த தகவல்கள்

புதிய பீட்டில் 936 சிசி டர்போ சார்ஜ்டு ஸ்மார்ட் டெக் டீசல் எஞ்சினை பொருத்தியுள்ளது ஜெனரல் மோட்டார்ஸ்.

இந்த எஞ்சி்ன் 57.3 பிஎஸ் ஆற்றலையும், 4,000 ஆர்பிஎம் வேகத்தையும் கொடுக்கிறது.

புதிய எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங்குடன் வருகிறது டீசல் பீட். ( பெட்ரோல் பீட் காரில் சமீபத்தில் இந்த புதிய பவர் ஸ்டீயரிங் அறிமுகம் செய்யப்பட்டது)

ஏஆர்ஏஐ சான்றுகளின்படி லிட்டருக்கு 24 கி.மீ செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மிகமிக குறைந்த எஞ்சின் சப்தம்

5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ்

இன்டீயரில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை

உலகிலேயே முதன்முறையாக பீட் டீசல் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது ஜெனரல் மோட்டார்ஸ்.

வரும் ஜூலை முதல் வாரத்தில் டீசல் பீட்டை முறைப்படி அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பெட்ரோல் மாடலை காட்டிலும் ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை விலை கூடுதலாக இருக்கலாம்.

டீசல் மாடல் பீட் சந்தைக்கு வந்தவுடன் நிச்சயம் ஒரு கலக்கு கலக்கும் என்பதால் வாடிக்கையாளர்களும், ஆட்டோவட்டாரங்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Most Read Articles
English summary
India first market in the world where a diesel variant of the Beat is being launched Car to be officially launched in the first week of July At 24 kmpl, the fuel efficiency of the new Beat is surely astonishing.
Story first published: Wednesday, June 22, 2011, 9:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X