மினிடிரக் தயாரிப்பில் களமிறங்கும் அதுல் ஆட்டோ

Atul Autorickshaw
ராஜ்கோட்: மூன்று சக்கர வாகன தயாரிப்பில் புகழ்பெற்ற அதுல் ஆட்டோ விரைவில் மினிடிரக் தயாரிப்பிலும் களமிறங்குகிறது.

ராஜ்கோட்டை சேர்ந்த அதுல் ஆட்டோ நிறுவனம் பயணிகள் ஆட்டோ தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. இந்த நிறுவனம் தனது வர்த்தகத்தை பெரிய அளவில் விரிவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பொதுத்துறை நிறுவனமான ஸ்கூட்டர்ஸ் இந்தியாவை கையகப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் அந்த நிறுவனம் விரைவில் மினிடிரக் தயாரிப்பிலும் இறங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

மினிடிரக் தயாரிப்பிற்காக புதிய தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ள அந்த நிறுவனம் அகமதாபாத் அருகே இடத்தை தேர்வு செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

புதிய மினிடிரக்கை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி நிறுவனத்தின் சந்தை நிபுணர்கள் மதிப்பீடு செய்து கொடுத்த பரிந்துரைகளின் அடிப்படையில் வடிவமைப்பு பணிகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும, நகர்ப்புற சந்தைக்கு ஏற்ற வகையில் இந்த மினிடிரக் இருக்கும் என்றும் அதுல் கூறியுள்ளது. ஆனால், இந்த புதிய மினிடிரக் தயாரிப்பு மற்றும் அதற்கான முதலீடுகள் குறித்த தகவலை அதுல் ஆட்டோ தெரிவிக்கவில்லை.

Most Read Articles
English summary
Atul Auto, a three-wheeler manufacturer, has stated that it will be entering the four-wheeler commercial vehicle sector in the upcoming future. It has also commenced scouting for land near Ahmedabad to establish a dedicated unit for it.
Story first published: Friday, June 10, 2011, 12:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X