அவுரங்காபாத் ஆலையில் 600 பேருக்கு வேலை: ஆடி அறிவிப்பு

Audi
அவுரங்காபாத்: உற்பத்தி திறனை உயர்த்துவதற்கு ஏதுவாக புதிதாக 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை நியமனம் செய்ய இருப்பதாக ஆடி இந்தியா அறிவித்துள்ளது.

இந்தியாவின் சொகுசு கார் மார்க்கெட்டில் ஜெர்மனியை சேர்ந்த ஆடி நிறுவனம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மேலும், இந்தியாவின் நம்பர் ஒன் சொகுசு கார் நிறுவனமாக மாறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் ஆடி மேற்கொண்டுள்ளது.

இதற்கு ஏதுவாக மனிதவளத்தை அதிகரிக்கும் விதமாக புதிதாக 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை விரைவில் பணியில் சேர்க்க இருப்பதாக ஆடி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆடி இந்தியா தலைவர் மைக்கேல் பெர்ஷ்கே கூறியதாவது:

"இந்திய மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிக்க சுறுசுறுப்பாக இயங்கி வருகிறோம். இதற்கு தக்கவாறு தொழிற்சாலை, ஷோரூம்கள் மற்றும் அலுவலங்களில் மனிதவளத்தை படிப்படியாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.

அவுரங்காபாத் ஆலையின் உற்பத்தி திறனை அதிகரிக்க புதிய தொழிலாளர்களை அதிக அளவில் நியமிக்க இருக்கிறோம்.

தவிர, டயர்-2 என்று கூறப்படும் இரண்டாம் தர நகரங்களில் புதிய ஷோரூம்களை திறக்க இருக்கிறோம். ஏற்கனவே, டயர்-2 நகரங்களில் 13 ஷோரூம்கள் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், கார் மாடல்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். சமீபத்தில் ஏ-6 பிரிமியம் செடான் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்ததொடர்ந்து, க்யூ-3 எஸ்யூவி கார் அறிமுகம் செய்ய இருக்கிறோம்," என்று கூறினார்.

Most Read Articles
English summary
Audi India, The Indian subsidiary of the German premium carmaker is hiring big time. The company is conducting recruitment drives to appoint more than 600 workers at its plant in Aurangabad. Michael Perschke, the Audi India chief has said this recruitment drive was part of an aggressive expansion plan that aims at making Audi the No1 premium car maker in India. He also said Audi was expanding its dealerships in Tier II cities and had already opened 13 new showrooms.
Story first published: Saturday, August 6, 2011, 16:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X