காம்பெக்ட் கார் சந்தையிலும் களமிறங்க ஆடி முடிவு

ஆடி நிறுவனத்தின் புத்தம் புதிய ஏ7 சொகுசு கார் அறிமுக விழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது. இந்த விழாவில் அனில் ரெட்டி கலந்துகொண்டு ஏ7 காரை அறிமுகப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
" காம்பெக்ட் சொகுசு கார்களுக்கு நம் நாட்டு வாடிக்கையாளர்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. சந்தையை ஆரம்பம் முதலே நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம். எனவே, காம்பெக்ட் சொகுசு காரை அறிமுகப்படுத்துவது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்.
காம்பெக்ட் கார் சந்தையில் நுழைந்தால் மார்க்கெட்டில் எங்களது பங்களிப்பு அதிகரிக்கும் என்பதோடு மட்டுமில்லாமல், மற்ற நிறுவனங்களுடன் எளிதில் போட்டி போட முடியும். வாடிக்கையாளர்கள் எங்களது காம்பெக்ட் காருக்கு அமோக வரவேற்பு கொடுப்பார்கள் என்பது உறுதி. இதுகுறித்த சாதகபாதகங்களை ஆராய்ந்து வருகிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








