நெருக்கடியில் ஆட்டோமொபைல் துறை- பிரணாப் முகர்ஜி பேட்டி

Pranab Mukherjee
டெல்லி: "வாகன கடன்களுக்கான வட்டி வீதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியதால், மற்ற துறைகளை விட ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்," என்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

வாகன தயாரிப்புக்கான உற்பத்தி செலவீனம் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால், இந்த ஆண்டு தொடக்கம் முதலே வாகன நிறுவனங்கள் அடுத்தடுத்து விலை உயர்வை அறிவித்தன.

குறிப்பாக, கார்களின் விலை அடுத்தடுத்து உயர்த்தப்பட்டதால், வாடிக்கையாளர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுஒருபுறம் இருக்க, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி வீதத்தை ரிசர்வ் வங்கி தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

கார் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரித்ததால், கடந்த இரண்டு மாதங்களாக கார் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. இதனால், இந்த ஆண்டு கார் விற்பனை வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியதால் ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,""பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.

இதன் எதிரொலியால், மற்ற துறைகளை காட்டிலும், ஆட்டோமொபைல் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடும்," என்றார்.

Most Read Articles
English summary
Union Finance Minister Pranab Mukherjee has said that interest-sensitive sectors like automobiles and real estate are likely to get affected more compared to other segments by rise in borrowing costs. Car sales have already taken a hit in the month of July. Even Luxury carmakers who did not suffer a sales decline have said their sales in July were not up to the mark.
Story first published: Monday, August 22, 2011, 14:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X