புதிய எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவிலும் அறிமுகம்: பிஎம்டபிள்யூ

BMW Electric Car
டெல்லி: வரும் 2013-14ம் ஆண்டு காலத்தில் ஐரோப்பிய. சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஐ-3 மற்றும் ஐ-8 எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று பிஎம்டபியூ தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் கார்களுக்கான மாசுக்கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாக்கப்பட இருக்கின்றன.

இதையடுத்து, முன்னணி நிறுவனங்கள் குறைந்த கார்பன் புகையை வெளியிடும் கார்களை தயாரிப்பதற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

சொகுசு கார் தயாரிப்பில் புகழ்பெற்ற பிஎம்டபிள்யூ நிறுவனமும் குறைந்த கார்பன் புகையை வெளியிடும் கார் தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

மேலும், ஐ-3 மற்றும் ஐ-8 என்ற பெயரில் தான் வடிவமைத்துள்ள இரு எலக்ட்ரிக் கார்களை வெளியுலகுக்கு சமீபத்தில் அறிமுகம் செய்தது,

விரைவில் இந்த கார்கள் வர்த்தக ரீதியில் உற்பத்தி செய்வது துவங்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்தது.

இந்த நி்லையில், சர்வதேக அளவில் அறிமுகம் செய்யப்படும்போது இந்தியாவிலும் இந்த கார்கள் அறிமுகம் செய்யப்படும் என்று பிஎம்டபிள்யூ கூறியுள்ளது.

இதுகுறித்து பிஎம்டபிள்யூ போர்டு மேனேஜ்மென்ட் தலைவர் டாக்டர் நார்பெர்ட் ரெத்தோஃபெர் கூறியதாவது

"இந்த கார்கள் ஜெர்மனியில் அறிமுகம் செய்யப்படும். பின்னர் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்படும்போது இந்தியாவிலும் இந்த கார்கள் அறிமுகம் செய்யப்படும்.

இதில், ஐ-3 சிட்டி கார் கான்செப்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 100 கிமீ வேகத்தில் செல்லும்.

மற்றொன்று ஐ-8 கார் ஸ்போர்ட்டி ரகத்தை சேர்ந்த எலக்ட்ரிக் காராக இருக்கும். இது பெர்பார்மென்சில் பிச்சு உதறும் என்றார்.

Most Read Articles
English summary
German premium car manufacturer has said it would launch the i3 and i8 electric cars. The 13 and i8 might hit the European car market by 2013-14. The two electric cars were unveiled recently and the carmaker will soon announce the commercial production of these two stunning new cars. When asked if these two electric cars will make its way to India, BMW's Chairman of Board Of Management Dr Norbert Reithofersaid: “Our first country for launch of these cars is Germany. We have the world in our minds which includes India as well, but this will only happen in the future.”
Story first published: Saturday, August 6, 2011, 11:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X