டீலர் எண்ணிக்கையை மும்மடங்காக உயர்த்தும் பிஎம்டபிள்யூ

BMW Car
சென்னை: வரும் 2015ம் ஆண்டுக்குள் டீலர் எண்ணிக்கையை மும்மடங்காக அதிகரிக்க பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது.

சொகுசு கார் விற்பனையில் பிஎம்டபிள்யூ முதலிடம் வகிக்கிறது. நாடு முழுவதும் இந்த நிறுவனத்துக்கு தற்போது 22 டீலர்கள் உள்ளனர்.

டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்கள்தான் பிஎம்டபிள்யூவின் முக்கிய சந்தையாக இருக்கிறது.

இந்த நிலையில், விற்பனையில் டெல்லி மற்றும் மும்பையை மட்டும் நம்பி இருக்காமல், விற்பனையை அதிகரிக்கும் வகையில் நாட்டின் பிற நகரங்களிலும் புதிய டீலர்களை நியமிக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பிஎம்டபிள்யூ இந்தியா தலைவர் ஆன்டிரியாஸ் சாப் கூறியதாவது:

"நாடு முழுவதும் புதிய டீலர்களை அதிக அளவில் நியமிக்க திட்டமிட்டுள்ளோம். வரும் 2015க்குள் டீலர் எண்ணிக்கை 60 ஆக உயர்த்தும் வகையில் எங்களது விரிவாக்கம் இருக்கும்.

எங்களது விற்பனையில் 60 சதவீதம் டெல்லி மற்றும் மும்பையில் நடக்கின்றன. புதிய டீலர்கள் திறக்கப்பட்டவுடன் அந்த நகரங்களின் பங்களிப்பு 40 சதவீதமாக குறையும்," என்றார்.

Most Read Articles
English summary
BMW India is looking to nearly triple its dealership count by 2015, a move that would reduce its dependence on key markets such as Delhi and Mumbai
Story first published: Wednesday, June 8, 2011, 12:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X