விற்பனை மந்தம்: உற்பத்தியை குறைத்தன கார் நிறுவனங்கள்

Car Market
டெல்லி: கடந்த இரண்டு மாதங்களாக கார் விற்பனையில் தேக்கமான சூழ்நிலை நீடிப்பதால், கார் உற்பத்தியை பல முன்னணி நிறுவனங்கள் வெகுவாக குறைத்துள்ளன.

கடந்த 2008ம் ஆண்டு உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவு காரணமாக கார் விற்பனை வெகுவாக சரிந்தது. ஆனால், பல்வேறு மீட்சி நடவடிக்கைகளால் பொருளாதாரம் ஏற்றம் பெற்றதால், கார் விற்பனை மீண்டும் சூடுபிடித்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கார் விற்பனை பல உச்சங்களை எட்டி வந்தது. இந்த நிலையில், கடந்த மேமாதத்திலிருந்து கார் விற்பனை வளர்ச்சி குறைந்து காணப்படுகிறது.

இதனால், விற்பனையை அதிகரிக்க அனைத்து கார் உற்பத்தி நிறுவனங்களும் கடந்த மாத இறுதியில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல சலுகைகளை அறிவித்தன.

இருப்பினும் கார் விற்பனை போதிய வளர்ச்சியை எட்டவில்லை. மேலும், டீலர்களில் கார் இருப்பு அதிகமாக உள்ளது.

இதையடுத்து, கார் உற்பத்தியை மாருதி, ஹூண்டாய் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் குறைத்துவிட்டன.

குர்கானில் உள்ள மாருதி தொழிற்சாலையில், உற்பத்தி ஒரு வாரத்திற்கு முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதேபோன்று, ஹூண்டாய் நிறுவனம் கார் உற்பத்தியை குறைத்துள்ளது. ஆனால், வெர்னா காரின் உற்பத்தியை மட்டும் அதிகரித்துள்ளது.

மஹிந்திரா நிறுவனமும் உற்பத்தியை குறைத்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. பல முன்னணி கார் நிறுவனங்களின் தொழிற்சாலைகளிலும் இதே நிலவரம் நீடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், உதிரிபாகங்களை குறைத்து அனுப்புமாறு தங்களது சப்ளையர்களை பல கார் நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் ஆட்டோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
Car industry facing demand slowing considerably over the last few weeks, most car and sports utility vehicle makers are keeping production levels low and close to the retail level to suit the demand, which is set for a downward swing over the next two months.
Story first published: Wednesday, June 29, 2011, 14:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X