1,00,000 மைக்ரா கார்கள் உற்பத்தி:சென்னை நிசான் ஆலையில் கொண்டாட்டம்

Nissan Micra
சென்னை: சென்னையிலுள்ள நிசான் ஆலையில் 1,00,000 மைக்ரா கார்கள் உற்பத்தி செய்யப்பட்டதையடுத்து, அங்கு கொண்டாட்டங்கள் களைகட்டியது.

கடந்த ஆண்டு மேமாதம்தான் மைக்ராவின் நான்காம் தலைமுறை மைக்ரா காரின் உற்பத்தியை நிசான் நிறுவனம் சென்னை அருகே உள்ள ஓரகடம் தொழிற்சாலையில் துவங்கியது.

அதற்குள், 1,00,000 கார்களை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதை கொண்டாடும் விதமாக நிசான் ஆலையில் நிகழ்ச்சிகள் நடந்தன.

விழாவில் கலந்துகொண்ட இந்தியாவுக்கான கார்ப்பரேட் துணைத்தலைவர் கில்லெஸ் நார்மண்ட் கூறியதாவது:

"சென்னை ஆலையில் மைக்ராவின் உற்பத்தி ஒரு லட்சத்தை கடந்துள்ளது மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. குறுகிய காலத்தில் இ்ந்த புதிய மைல்கல்லை எட்டியுள்ளோம்.

உள்நாட்டு சந்தை மற்றும் ஏற்றுமதிக்கு சென்னை ஆலை நிசான் நிறுவனத்தின் முக்கிய அங்கமாக மாறியுள்ளது," என்றார்.

சென்னை ஆலையின் மேலாண் இயக்குனர் கொயூ கிமுரா கூறுகையில்," இந்த புதிய மைல்கல்லை கடப்பதற்கு பாடுபட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் நன்றிகளை உரித்தாக்குகிறேன். தரமான தயாரிப்புகளை வழங்குவதை முக்கிய கொள்கையாக கொண்டு செயலாற்றுகிறோம்," என்று கூறினார்.

சென்னை ஓரகடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட ஆலை ரினால்ட்- நிசான் கூட்டு ஒப்பந்தத்தில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Employees at the Renault Nissan Alliance plant in Chennai, India celebrated producing their 100,000th Micra in just over a year. The first Micra compact hatchback rolled off the production line in May 2010. Since then the workforce has expanded to nearly 4,000 (from an original 1,500) to meet demand from within India and across the world.
Story first published: Friday, June 17, 2011, 11:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X