இந்திய கார் சந்தையை பிடிக்க ஆயத்தமாகும் பியூஜியட் நிறுவனம்

By
Citroen
டெல்லி: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில்,வெற்றிகொடி நாட்ட வேண்டும் என்ற துடிப்பு சர்வதேச கார் உற்பத்தி நிறுவனங்களை ஆட்டிப்படைக்கிறது. இந்த வரிசையில் தனது துணை நிறுவனத்தின் மூலம் இந்திய சந்தையில் மீண்டும் கால் பதிக்க முடிவு செய்துள்ளது பிரான்சை சேர்ந்த பியூஜியட் நிறுவனம்.

பியூஜியட்நிறுவனத்திற்கு இந்திய சந்தை புதிதல்ல.கடந்த 20 ஆண்டுகளுக்க முன் பிரிமியர் நிறுவனத்துடன் கூட்டு வைத்து சந்தையில் இடம்பெற்றிருந்தது. ஆனால்,இந்திய சந்தையி்ல் குறிப்பிட்ட இடத்தை பிடிக்க முடியாமல் விரக்தி அடைந்த பியூஜியட் இந்தியாவிலிருந்து வெளியேறியது.

இந்த நிலையில்,இந்திய சந்தையை மீண்டும் பிடிக்க பியூஜியட்முடிவு செய்துள்ளது.தனது துணை நிறுவனமான சிட்ரோவன் கார் உற்பத்தி தொழிற்சாலையை இந்தியாவில் அமைக்க பியூஜியட் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பியூஜியட் சிட்ரோவன் நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் கூறியதாவது:

"இந்தியாவில் விற்பனை துவங்குவது தொடர்பான நடைமுறைகள் அனைத்தும் இந்த காலாண்டிற்குள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம். எங்களது சி1 காம்பக்ட் ஹேட்ச்பேக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

மேலும்,கார் உற்பத்தி தொழிற்சாலையை தமிழகம் அல்லது ஆந்திராவி்ல் அமைப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.சோதனை ஓட்ட மையம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களுடன் 300 ஏக்கரில் தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

மாருதி வேகன்ஆர்,ஹூண்டாய் ஐ10,செவரோலெ பீட் கார்களுக்கு இந்த சி1 மாடல் கடும் போட்டியை தரும். மேலும்,இந்திய சந்தையில் நிலவும் கடும் போட்டியை சமாளி்த்து வெற்றி பெற இந்திய நிலவரங்களுக்கு தகுந்த புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவும் முடிவுய்துள்ளோம்,"என்று கூறினார்.

பிரிட்டனில் சி1 காம்பக்ட் காரின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 5.25லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles
English summary
At least one product from the reputed auto makers is on the market to please the desired customers. However, the French auto giant Peugeot is brushing its mind to come out with its product for this Indian market. There are reports over its proposed launch of its Citroen replacing Peugeot in a bid to make the process smooth. The company had been in exile for the last two decades once its JV with Premier Automobile failed to impress the market.
Story first published: Tuesday, February 8, 2011, 12:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X