டெல்லியில் எரிவாயுவில் இயங்கும் வால்வோ பஸ் சோதனைஓட்டம்

Cng Volvos Bus
டெல்லி: டெல்லியில் சிஎன்ஜி எனப்படும் எரிவாயுவில் இயங்கும் வால்வோ பஸ் சோதனைஓட்டத்தை டெல்லி போக்குவரத்து கழகம்(டிடிசி) சமீபத்தில் துவங்கியுள்ளது. சோதனைஓட்டம் வெற்றிகரமாக முடிந்தவுடன் டெல்லி முழுவதும் இந்த நகர சிஎன்ஜி வால்வோ பஸ்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுப்புற சீர்கெடுவதை தடுக்கும் வகையில் டெல்லியில் சிஎன்ஜி பஸ்களை மட்டும் இயக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் ஆணை பிறப்பித்தது. இதன் விளைவாக அங்கு படிப்படியாக அனைத்து பஸ்களும் சிஎன்ஜியில் இயங்கும் வகையில் மாற்றப்பட்டது.

டெல்லியில் ஓடும் அனைத்து பஸ்களும் சிஎன்ஜியில் இயங்குகின்றன. இந்த நிலையில் வால்வோ நிறுவனமும் தனது பஸ்களை சிஎன்ஜியில் இயங்கும் வகையில் தயாரித்துள்ளது. இந்த சிஎன்ஜி பஸ்களை சோதனை ஓட்டம் நடத்துவதற்காக டிடிசியிடம் வால்வோ வழங்கியுள்ளது.

இதையடுத்து, சிஎன்ஜி வால்வோ பஸ்களின் சோதனைஓட்டத்தை டிடிசி சமீபத்தில் துவங்கியுள்ளது. இந்த சோதனைஓட்டம் 5 மாதங்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஎன்ஜியில் இயங்கும் வால்வோ பஸ் அறிமுகம் குறித்து டெல்லி முதல்வர் ஷீலா தீ்ட்சித் கூறுகையில்," சோதனை முறையில் இயக்கப்படும் பஸ்களின் செயல்திறன் மற்றும் பஸ் குறித்து பயணிகள் தெரிவிக்கும் ருத்துக்களை அடிப்படையாக கொண்டு சிஎன்ஜி வால்வோ பஸ்களை டிடிசியில் சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்படும்," என்றார்.

வால்வோ நிறுவன மேலாண் இயக்குனர் ஆகாஷ் பாசே கூறியதவாது:

"குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் சிஎன்ஜி பஸ் இயக்கி சோதனை நடத்தப்படுகிறது. சோதனைஓட்டம் வெற்றிகரமாக முடிந்தவுடன் டெல்லி போக்குவரத்து கழகத்தில் சிஎன்ஜி பஸ்கள் சேர்க்கப்படும்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சிஎன்ஜி பஸ்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், எரிபொருள் சிக்கனத்தையும் தரும் வகையில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், அதிக திறன் மிக்க எஞ்சின், குறைவான சப்தம் மற்றும் அழகிய உட்புற வடிவமைப்புடன் அறிமுகப்படுத்தியுள்ளோம். வால்வோ சிஎன்ஜி பஸ்கள் டெல்லி போக்குவரத்தில் நிச்சயம் புதிய புரட்சியை ஏற்படுத்தும்," என்று கூறினார்.

Most Read Articles
English summary
The trial began Friday of automobile major Volvo's first compressed natural gas (CNG)-powered low-floor city bus, which is being evaluated by the Delhi Transport Corporation (DTC).
Story first published: Monday, June 6, 2011, 13:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X