6 வீல்களுடன் மல்டி ஆக்சில் சூப்பர் கார்: கொவினி சாதனை

Covini c6w
மல்டி ஆக்சில் டிரக், மல்டி ஆக்சில் பஸ் ஆகியவற்றை பார்த்திருக்கிறோம். ஆனால், இத்தாலியை சேர்ந்த கொவினி நிறுவனம் 6 வீல்களுடன் கூடிய மல்டி ஆக்சில் சூப்பர் காரை வடிவமைத்து அசத்தியுள்ளது.

சி6டபிள்யூ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கார் உலகின் 6 சக்கரங்களை கொண்ட முதல் கார் என்ற பெருமையை பெற்றுள்ளது. முன்பக்கம் நான்கு சக்கரங்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரில் இரண்டு பேர் அமர்ந்து பயணம் செய்யலாம்.

இதில், 500 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் ஆடியின் 4.2 லிட்டர் வி-8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இலகு எடையும், அதிக உறுதித்தன்மையும் வாய்ந்த கார்பன் பைஃபர் பொருட்களால் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இந்த கார் வெறும் 1,150 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது.

மணிக்கு அதிகபட்சமாக 300கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல் படைத்த இந்த கார் சமீபத்தில் இந்த கார் ரேஸ் டிராக்கில் வைத்து சோதனை நடத்தப்பட்டது. காற்றில் பறப்பது போன்று ரேஸ் டிராக்கில் பறந்த இந்த கார் சாதாரண கார்களைவிட வளைவுகளில் அதிக பேலன்ஸுடன் திரும்பி அனைவரையும் அசத்தியது.

முன்பக்கம் நான்கு வீல்கள் பொருத்தப்பட்டுள்ளதால், அதிக ரோடு கிரிப் மற்றும் பிரேக் அடிக்கும்போது குறைந்த தூரத்தில் நச்சென்று நின்றது. இதை ஓட்டி சோதனை நடத்திய டிரைவர் கூறுகையில், "முன்பக்கம் நான்கு வீல்கள் பொருத்தப்பட்டிருப்பதால், ஸ்டீயரிங் சற்று கடினமாக இருக்கும் என்று கருதினேன்.

ஆனால், எனது கணிப்பை பொய்யாக்கி, சாதாரண கார்களைவிட வெகு அழகாக வளைவுகளில் திரும்புகிறது. மேலும், வளைவுகளில் பயமில்லாமல் திருப்ப முடிந்தது. குறிப்பாக, பிரேக் சூப்பராக இருக்கிறது," என்றார்.

Most Read Articles
English summary
The Covini C6W recently became the world's first six wheeled production car to be personally invited to the prestigious Goodwood Festival of Speed by its chairman Lord Marsh. The Covini quickly became one of the star attractions of the 2011 event with experts and the public alike.The spirit of that extraordinary machine lives on in the exquisite, hand crafted Covini C6W – the only supercar in the world with a remarkable six wheel configuration. Powered by an Audi 4.2 liter V8 that produces nearly 500bhp, and with its weight kept to just 1150kg using a tubular steel frame and a lightweight carbon fiber body, the C6W is capable of exceeding speeds of 300kph (190mph).
Story first published: Monday, August 29, 2011, 13:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X