மேமாதத்தில் உள்நாட்டு மொத்த வாகன விற்பனை அதிகரிப்பு

Car Sales
டெல்லி: கடந்த மாதம் உள்நாட்டு கார் விற்பனை 7 சதவீதமும், பைக் விற்பனை 14 சதவீதமும் அதிகரித்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பு(சியாம்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சியாம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த மாதம் நம் நாட்டில் மொத்தம் 1,58,817 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மேமாத மொத்த கார் விற்பனையுடன் 1,48,425 ஒப்பிடும்போது, இது 7 சதவீதம் உயர்வு கண்டுள்ளது.

பைக் விற்பனையை பொறுத்தவரை கடந்தமாதம் நாட்டில் மொத்தமாக 8,29,255 மோட்டார்சைக்கிள்கள் விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டு மேமாதத்தில் 7,25,311 மோட்டார்சைக்கிள்கள் விற்பனையாகி இருந்ததால், கடந்த மாதம் விற்பனை 14.33 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு மேமாதம் வர்த்தக வாகனங்களின் மொத்த விற்பனை 48,473ஆக இருந்தது. ஆனால், கடந்த மாதம் இது 16.16 சதவீதம் அதிகரித்து 56,314 வாகனங்கள் விற்பனையாகி உள்ளது.

நாட்டின் மொத்த வாகனங்களின் விற்பனை கடந்த மாதம் 13.40 சதவீதம் அதிகரித்து 13,70,786 ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு மேமாதம் மொத்த விற்பனை 12,08,820 வாகனங்களாக இருந்தது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary:

Most Read Articles
English summary
Domestic passenger car sales grew by 7 per cent to 1,58,817 units in May, 2011, from 1,48,425 units in the same month last year. According to figures released by the Society of Indian Automobile Manufacturers (SIAM) today, motorcycle sales in the country grew by 14.33 per cent during the month to 8,29,255 units from 7,25,311 units in the corresponding month last year.
Story first published: Thursday, June 9, 2011, 14:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X