விற்பனையில் 2 லட்சத்தை கடந்து மாருதி எஸ்டிலோ புதிய சாதனை

Maruti Estilo
டெல்லி: இந்தியாவில் எஸ்டிலோ காரின் விற்பனை 2 லட்சம் என்ற புதிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளதால், "எஸ்டிலோ வோக்" என்ற பெயரில் லிமிடேட் எடிசன் எஸ்டிலோ காரை மாருதி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு 'பி' செக்மென்ட் பிரிவில் எஸ்டிலோ ஹேட்ச்பேக் காரை மாருதி அறிமுகப்படுத்தியது. வழக்கம்போல் மாருதி பேனரில் எஸ்டிலோவும் மார்க்கெட்டில் தனி இடத்தை பிடித்துக்கொண்டது.

கடந்த 2009ம் ஆண்டு எஸ்டிலோவின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் சில மாற்றங்களை செய்து புத்தம் புது அம்சங்களுடன் எஸ்டிலோ காரை மாருதி அறிமுகப்படுத்தியது. இதனால், மார்க்கெட்டில் எஸ்டிலோவுக்கு இருந்த மவுசு மேலும் அதிகரி்த்தது. இதேபோன்று, விற்பனையிலும் பல புதிய மைல்கற்களை கடந்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் எஸ்டிலோ விற்பனை 2 லட்சத்தை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது. இதை கொண்டாடும் வகையில், எஸ்டிலோ வோக் என்ற பெயரில் லிமிடேட் எடிசன் எஸ்டிலோ காரை மாருதி அறிமுகம் செய்துள்ளது.

லெதர் இருக்கைகள், புதிய வடிவமைப்புடன் கூடிய தரைவிரிப்புகளுடன் ஆகிய அம்சங்களுடன் லிமிடேட் எடிசன் எஸ்டிலோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போது எஸ்டிலோவில் வரும் அதே கேபி10 வரிசை எஞ்சினுடன் எஸ்டிலோ வோக் வருகிறது.

Most Read Articles
English summary
Maruti's stylish hatchback Estilo sales crosses 2,00,000 units in India. On this occasion Maruti has introduced a limited edition "Estilo Vogue" in the Indian market.
Story first published: Thursday, June 9, 2011, 11:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X