டாடா மோட்டார்ஸ் உறவை முறித்துக்கொள்ள ஃபியட் முடிவு?

கடந்த 2007ம் ஆண்டு டாடா மோட்டார்ஸ்- ஃபியட் இடையே கூட்டுத்தொழில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, டாடா மோட்டார்ஸ் ஷோரூம்களிலேயே ஃபியட் கார்களை விற்க ஏற்பாடானது. மேலும், டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் ஃபியட் கார்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நாளுக்கு நாள் கார் விற்பனை குறைந்து வருவதால், நாடு முழுவதும் தனி ஷோரூம்களை அமைத்து கார் விற்பனையில் ஈடுபட ஃபியட் ஏற்கனவே முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஆனால், டாடா மோட்டார்ஸ் நிர்வாகத்திடமோ அல்லது செய்தியாளர்களிடமோ இதுகுறித்து தகவல் எதையும் ஃபியட் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், டாடா குழுமத் தலைவர் ஃபியட் உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளதால், விரைவில் டாடாவுடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள ஃபியட் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதைதான்.


Click it and Unblock the Notifications








