ஃபியட் லீனியா மிட்சைஸ் காரின் சிறப்பு பார்வை

By Super
Fiat Linea
"என்னிடம் ரூ.10 லட்சம் இருக்கிறது; அனைத்து அம்சங்களுடன் கூடிய மிட் சைஸ் கார் வேண்டும் என்பவர்களுக்கு ஃபியட் லீனியா பெஸ்ட் சாய்ஸ். வடிவமைப்பு, வசதிகள், கையாளுமை என லீனியாவை தேர்வு செய்ய பல காரணங்களை கூறலாம்.

குறிப்பாக, மல்டிஜெட் தொழில்நுட்பம் கொண்ட டீசல் எஞ்சினுடன் வரும் லீனியா மிட்சைஸ் செக்மென்டில் தற்போது அனலை பரப்பி வருகிறது. மேலும், பெட்ரோல் விலை உயர்வால் டீசல் லீனியாவின் மதிப்பு மார்க்கெட்டில் படுவேகமாக உயர்ந்து வருகிறது.

எஞ்சின்:

பெட்ரோல் மாடலில் 1368 சிசி திறன் கொண்ட 1.4 லிட்டர் எஞ்சினும், டீசலில் மாடலில் 1248சிசி திறன்கொண்ட 1.3 லிட்டர் எஞ்சினும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டிலுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது. நெடுஞ்சாலைகளில் செல்லும்போது மெதுவாக சென்று வேகமெடுப்பதில் இரண்டு எஞ்சின்களும் சிறப்பான பிக்கப்பை கொண்டுள்ளன.

வடிவமைப்பு:

லீனியாவின் வெளிப்புற வடிவமைப்பில் மிகுந்த கவனமும் அக்கறையையும் ஃபியட் காட்டி இருப்பது கண்கூடாக தெரிகிறது. பின்புறத்தை பார்த்தால் அனேக நிறுவனங்களின் மிட்சைஸ் கார்கள் பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் தெரியும். ஆனால், லீனியாவின் பின்புறத்தை சற்று வித்தியாசமாக யோசித்து அந்த குறையை போக்கியுள்ளது ஃபியட்.

உட்புற வடிவமைப்பு:

டேஷ்போர்டு, இருக்கைகள் மற்றும் உள்ளலங்காரங்கள் லீனியாவில் கொடுக்கும் மதிப்புக்கு ஏற்றதாகவே இருக்கிறது. மேலும், ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் ஸ்விட்ச்கள் கொடுக்கப்பட்டுள்ளதும், முன்புற இருக்கைகள் விசாலமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சொகுசு மற்றும் கையாளுமை:

விலை மதிப்புமிக்க சொகுசு கார் வரிசையில் சேர்த்துவிடும் அளவுக்கு இதமான பயண அனுபவத்தை கொடுக்கிறது லீனியா. ஸ்டீயரிங் வீலிலேயே கன்ட்ரோல் ஸ்விட்ச்கள் பொருத்தப்பட்டிருப்பதால், டிரைவிங்கின்போது அதிக வசதியை உணர முடிகிறது. டிரைவிங் செய்வதற்கும் எளிதாக இருப்பதால், புதிய அனுபவத்தை தருகிறது.

பாதுகாப்பு அம்சங்கள்:

தீ தடுப்பு சாதனம், கதவுகள் திறந்திருந்தால் எச்சரிக்கும் இன்டிகேட்டர், சென்ட்ரல் லாக்கிங், ஏபிஎஸ் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் லீனியாவில் உள்ளன.

மைலேஜ்:

நகர்ப்புற சாலைகளில் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 12 கி.மீ. மைலேஜையும், டீசல் எஞ்சின் 14 கி.மீ. மைலேஜையும் தருகின்றன. நெடுஞ்சாலைகளில் செல்லும்போது பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 16 கி.மீ. மைலேஜும், டீசல் எஞ்சின் 19 கி.மீ. மைலேஜையும் கொடுக்கிறது. மேலும், 45 லிட்டர் கொள்ளளவு திறன்கொண்ட எரிபொருள் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.

விலை:

சென்னையில் பெட்ரோல் மாடல் லீனியா விலை ரூ.7.38 லட்சம் முதல் ரூ.8.45 லட்சம் வரையிலும், டீசல் மாடல் ரூ.8.45 லட்சம் முதல் ரூ.9.98 லட்சம் ஆன்ரோடு விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles
English summary
The linea is a comfortable mid-size sedan car from the Italian auto giant Fiat. It is available both petorl and diesel variants. Here are given some specifications and features of Fiat linea car.
Story first published: Tuesday, March 6, 2012, 17:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X