சென்னை ஆலையில் புதிய பியஸ்ட்டா உற்பத்தியை துவங்கியது ஃபோர்டு

Ford Fiesta
சென்னை: சென்னை, மறைமலைநகரில் உள்ள ஆலையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய பியஸ்ட்டா செடான் காரின் உற்பத்தியை ஃபோர்டு நிறுவனம் துவங்கியுள்ளது.

அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த புதிய பியஸ்ட்டா செடான் ரக காரை இந்த ஆண்டு இறுதியில் ஃபோர்டு நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.

இதற்காக, சென்னை அருகே மறைமலைநகரில் அமைந்துள்ள தனது தொழிற்சாலையில் புதிய பியஸ்ட்டாவின் உற்பத்தியை ஃபோர்டு துவங்கியுள்ளது.

ஜெர்மனி, சீனா, தாய்லாந்து, ஸ்பெயின், மெக்சிகோ ஆகிய நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் மட்டும் பியஸ்ட்டா கார் இதுவரை உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், பியஸ்ட்டா காரை உற்பத்தி செய்யும் ஆறாவது தொழிற்சாலை என்ற பெருமையை சென்னை ஆலை பெற்றுள்ளது.

2015ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 8 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஃபோர்டு அறிவித்துள்ளது. இதில், முதலாவதாக அறிமுகம் செய்யப்பட உள்ள பியஸ்ட்டா காரின் உற்பத்தி சென்னை ஆலையில் துவங்கப்பட்டுள்ளது.

மேலும், ஆட்டோமேட்டிக் தொழில்நுட்ப வசதி கொண்ட சென்னை ஆலையை விரிவுப்படுத்துவதற்கு மேலும் ரூ.325 கோடி செலவிட இருப்பதாக ஃபோர்டு ஏற்கனவே அறிவித்துள்ளது. இதனால், கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று ஃபோர்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles

English summary
Ford has commenced the production of its new Fiesta sedan at Maraimalai Nagar manufacturing facility near Chennai. With this, the Maraimalai Nagar plant has become the sixth such facility in the world where the company produces this sedan.
Story first published: Saturday, June 18, 2011, 15:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X