சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத புதிய எஞ்சின் விரைவில் அறிமுகம் :ஃபோர்டு

For New Engine
டெட்ராய்ட்: சுற்றுச்சூழலுகக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் சிறிய கார்களுக்காக புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை களமிறக்க இருப்பதாக ஃபோர்டு அறிவித்துள்ளது.

விரைவில் துவங்க உள்ள பிராங்பர்ட் மோட்டார் கண்காட்சியில் இந்த புதிய எஞ்சினை ஃபோர்டு அறிமுகப்படுத்துகிறது. மூன்று சிலிண்டர்கள் கொண்ட இந்த எஞ்சின் பிக்கப்பிலும், எரிபொருள் சிக்கனத்திலும் வியக்க வைக்கும் என அந்த நிறுவனம் நம்பிக்கையுடன் கூறுகிறது.

1.6 லிட்டர் எஞ்சின்களின் அளவுக்கு திறனை வெளிப்படுத்தும் வகையில் வரவுள்ள இந்த 1.0 லிட்டர் எஞ்சின் 120 பிஎஸ் ஆற்றலையும், அதிகபட்சமாக 152 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் வகையில் ஃபோர்டு திறம்பட உருவாக்கியுள்ளதாக ஆட்டோமொபைல் வட்டார தகவல்கள் கூறுகின்றன.

இந்த சிறிய எஞ்சினை அனைத்து நாட்டு சந்தைகளிலும் அறிமுகப்படுத்த ஃபோர்டு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் 1.0 லி்ட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட கார்களுக்கு கிராக்கி அதிகம் இருப்பதால், ஃபோர்டு இந்தியா நிறுவனத்துக்கு புதிய எஞ்சின் பெரிதும் கைகொடுக்கும் என்று தெரிகிறது.

இதுதவிர, புதிய 8 ஸ்பீடு டிரான்மிஷன் கொண்ட கியர்பாக்சையும் உருவாக்கி வருவதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது. கைகளுக்கு மிகவும் ஸ்மூத்தாகவும், எளிதாகவும் கியர் மாற்றும் வகையில் புதிய கியர்பாக்ஸ் இருக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles

English summary
Ford has internationally announced a new one litre, turbo charged petrol engine with three cylinders. Ford will make this engine keeping the entire global scene in mind so that the engine can be plonked in small Ford cars all over the world.
Story first published: Saturday, June 4, 2011, 10:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X