நீண்டு கொண்டே செல்லும் புதிய ஸ்விப்ட் காத்திருப்பு காலம்: டீசல் காருக்கு 4 மாதங்கள் காத்திருக்கணும்

New Swift
டெல்லி: 50,000 புக்கிங்குகள் என்ற அசாத்திய பலத்துடன் களமிறங்கியுள்ள புதிய ஸ்விப்ட் காருக்கான காத்திருப்பு காலம் நீண்டு கொண்டே செல்கிறது.

சில ஷோரூம்களில் ஸ்விப்ட் டீசல் கார் புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் நான்கு மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மொத்தம் புக்கிங் செய்யப்பட்டுள்ள ஸ்விப்ட் கார்களில் 80 சதவீதம் டீசல் கார்கள் என மாருதி தெரிவித்துள்ளது.

டீசல் கார் மட்டுமின்றி ஸ்விப்ட் பெட்ரோல் மாடலுக்கான காத்திருப்பு காலமும் 2 முதல் 3 மாதங்கள் வரை நீண்டுள்ளது.

இந்த நிலையில், டீசல் ஸ்விப்ட் காருக்கான புக்கிங் தொடர்ந்து அதிகரித்து வருவதால், காத்திருப்பு காலம் மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காத்திருப்பு காலம் மேலும் அதிகரித்தால், வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைவார்கள் என்பதால் ஸ்விப்ட் காரின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் மாருதிக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், காத்திருப்பு காலத்தை குறைக்கும் வகையில் ஹங்கேரி நாட்டுக்கு ஸ்விப்ட் கார்கள் ஏற்றுமதியை கணிசமாக குறைக்க மாருதி முடிவு செய்துள்ளது.

இதுதவிர, சில பிரத்யேக கலர் ஸ்விப்ட் காரை வாங்க வேண்டும் என்றாலும், இன்னும் கூடுதலாக காத்திருக்க வேண்டும் என்று ஷோரூம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
The new Maruti Suzuki Swift has received a huge response from car buyers. We were wondering what the waiting period of the new swift would be. Recent reports say the diesel Swift's waiting period at some showrooms has crossed four months. Maruti Suzuki has said about 80 per cent of the new Swift's bookings was diesel. Even the petrol variant of the Swift is now commanding a waiting period of two to three months.
Story first published: Wednesday, August 24, 2011, 12:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X