கார்களுக்கான புதிய ஏர்பேக்: ஜெனரல் மோட்டார்ஸ் அறிமுகப்படுத்துகிறது

GM Car Airbag
கார் முன்னிருக்கையில் டிரைவருக்கும், பயணிக்கும் இடையில் புதிய ஏர்பேக்கை ஜெனரல் மோட்டார்ஸ் வடிவமைத்துள்ளது. வரும் 2013 ஆண்டு முதல் தனது கார்களில் இந்த புதிய ஏர்பேக்கை பொருத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கார்களுக்கான பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகள் நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது. அனைத்து முன்னணி நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு புதிய பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகளை அறிமுகப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் கார்களுக்கான புதிய ஏர்பேக்கை வடிவமைத்துள்ளது. கார்களின் முன்னிருக்கையில் டிரைவருக்கும் சக பயணிக்கும் இடையில் இருக்குமாறு இந்த ஏர்பேக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், பிற வாகனங்கள் பக்கவாட்டில் காருடன் மோதும்போது ஏற்படும் விபத்துக்களில் பயணிகளுக்கு அதிக காயம் ஏற்படுவதை தடுக்க முடியும் என்று ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இந்த புதிய ஏர்பேக் தொழில்நுட்பத்தை ஆட்டோமொபைல் துறையிலேயே ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம்தான் முதன்முறையாக வடிவமைத்துள்ளது.

வரும் 2013ம் ஆண்டு முதல் தனது புயிக் என்க்ளேவ், ஜிஎம்சி அகடியா மற்றும் செவர்லே ட்ராவர்ஸ் ஆகிய கார்களில் இந்த புதிய ஏர்பேக்கை ஸ்டாண்டர்டு ஆக்சஸெரீசாக பொருத்தி விற்பனை செய்ய ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
World's largest car maker General motors introduces new airbag for cars.It will be fitted in Buick Enclave, GMC Acadia, and Chevrolet Traverse midsize crossovers in the 2013 models. This new airbag to help protect the driver and co passenger during the side crashes.
Story first published: Saturday, October 1, 2011, 13:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X