புதிய பேட்டரி கார் தயாரிக்க ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் எல்ஜி ஒப்பந்தம்

Electric car
புதிய பேட்டரி காரை தயாரிக்கும் வகையில் கார் தயாரிப்பில் உலகின் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கும், மின்னணு சாதன தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் கொரியாவை சேர்ந்த எல்ஜி நிறுவனத்துக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

பேட்டரி காருக்கான வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை ஜெனரல் மோட்டார்ஸ் வழங்கும். அந்த காருக்கான பேட்டரியின் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை எல்ஜி நிறுவனம் வழங்கும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

ஜெனரல் மோட்டார்ஸ் தயாரிக்கும் செவர்லே வோல்ட் மற்றும் ஓபல் ஆம்பரா பேட்டரி கார்களுக்கான லித்தியான் அயான் பேட்டரிகளை எல்ஜி தயாரித்து வழங்கும். பேட்டரி மற்றும் ஹைபிரிட் கார்களை தயாரிப்பதற்கு ஜெனரல் மோட்டார்ஸ் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

அமெரிக்காவில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் தலைமையகத்தில் உள்ள ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு மையத்தில் அங்குள்ள எஞ்சினியர்களுடன் சேர்ந்து தற்போது எல்ஜி எஞ்சினியர்கள் புதிய பேட்டரி காரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோன்று, ஜெனரல் மோட்டார்ஸ் வல்லுனர்கள் விரைவில், தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள எல்ஜி ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு மையத்திற்கு விரைவில் சென்று புதிய காருக்கான பேட்டரி தயாரிப்பில் இணைந்து ஈடுபட இருக்கின்றனர்.

Most Read Articles
English summary
General Motors, the world's largest carmaker and LG, one of the leading electric appliance manufacturer have signed a deal to jointly develop electric cars. While General Motors will offer its car building expertise, LG will deliver the battery technology for electric cars. LG is already associated with General Motors. It currently supplies the lithium-ion batteries for GM's Chevrolet Volt and Opel Ampera. The new deal between GM and LG was signed by GM chief executive Daniel Akerson and LG President Juno Cho. The two companies have said they would work on developing a whole range of electric vehicles that will be sold across the world.
Story first published: Sunday, August 28, 2011, 10:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X