பார்வைக்கு வருகிறது ஜெனரல் மோட்டார்சின் பேட்டரி கார்

Chevrolet Beat
டெல்லி: ஸ்டைலான ஹேட்ச்பேக் கார் என்ற பெருமையை பெற்றுள்ள செவர்லே பீட்டின் எலக்ட்ரிக் மாடலை விரைவில் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டுவர இருப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

பேட்டரியில் இயங்கும் ஸ்பார்க் காரை அறிமுகப்படுத்துவதற்காக ரேவா பேட்டரி கார் நிறுவனத்துடன் ஜெனரல் மோட்டார்ஸ் கடந்த ஆண்டு ஒப்பந்தம் போட்டது. ஆனால், ரேவா கார் நிறுவனத்தை மஹிந்திரா வாங்கியதால், அந்த ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டது.

ஆனால், பேட்டரி காரை அறிமுகப்படுத்துவதில் அந்த நிறுவனம் உறுதியாக இருந்தது. தனது வெளிநாட்டு வடிவமைப்பு வல்லுனர்கள் குழு உதவியுடன் பேட்டரியில் இயங்கும் பீட் காரை வடிவமைத்துள்ளது ஜெனரல் மோட்டார்ஸ். இந்த காரை இந்த மாதத்தில் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வர இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் தலைவர் கார்ல் சிலிம் கூறியதாவது:

"இந்த கார் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும். பாகங்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் பெறப்படும். இந்த காரை உடனடியாக அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவுமில்லை. ஆனால், எங்களது தொழில்நுட்ப வலிமையை எடுத்துக்காட்டுவதற்கே காட்சிக்கு வைக்க திட்டமிட்டுள்ளோம்.

ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்ய 8 மணிநேரம் பிடிக்கும். முழு சார்ஜ் செய்தால் 130 கி.மீ. வரை செல்லமுடியும். மேலும், 60 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் எஞ்சின் இதில் பொருத்தப்பட்டு்ள்ளது. இந்த காரை ஓட்டி பார்க்க வாடிக்கையாளர் சிலருக்கு அனுமதி வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.

இந்த காரை மார்க்கெட்டிங் செய்யும் அளவுக்கு உற்பத்தி வசதிகளை நாங்கள் இன்னும் பெறவில்லை. சந்தைக்கு வந்தால் எங்களது விற்பனையில் 70 சதவீதம் அளவுக்கு பங்களிப்பை இந்த கார் கொடுக்கும்," என்று கூறினார்.

Most Read Articles
English summary
General Motors India (GMI) will showcase soon an electric version of the Beat hatchback. This compact car has been developed in-house with support from its global technical teams. A company official told Business Line that the electric Beat would have a range of around 130 km and batteries would take eight hours to charge. The electric motor is believed to produce 45 kW (about 60 hp) of power, which is almost as powerful as most compact cars in the market.
Story first published: Tuesday, June 7, 2011, 11:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X