சந்தை போட்டி: செவர்லே ஸ்பார்க் விலை ரூ.2.69 லட்சமாக குறைப்பு

Chevrolet Spark
மும்பை: சிறிய கார் சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் போட்டி காரணமாக ஸ்பார்க் காரின் விலையை ஜெனரல் மோட்டார்ஸ் ரூ.2.69 லட்சமாக குறைத்துள்ளது.

பீட் கார் அறிமுகத்தால் ஸ்பார்க் காரின் விற்பனையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும், அடுத்தடுத்து அறிமுகப்படுத்தும் புதிய கார்களின் வரவும் ஸ்பார்க்குக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.

இந்த நிலையில், புதிய ஸ்பார்க் காரை அறிமுகப்படுத்த ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், கையிருப்பில் உள்ள ஸ்பார்க் ஸ்டாக்கை தீர்த்துக்கட்ட அதன் விலையை ரூ.2.69 லட்சமாக ஜெனரல் மோட்டார்ஸ் குறைத்துள்ளது.

சந்தையில் அழகான ஹேட்ச்பேக் கார் என்ற பெருமையை பெற்ற ஸ்பார்க் ஜெனரல் மோட்டார்ஸின் செவர்லே பிராண்டின் என்ட்ரி லெவல் காராக இருக்கிறது.

ஆல்ட்டோவை ஒப்பிடும்போது, இதில் ஏராளமான வசதிகளை கொண்டிருக்கிறது. குறைந்த பராமரிப்பு செலவு, லி்ட்டருக்கு 18கிமீ மைலேஜ் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களை ஸ்பார்க் நிலைநிறுத்திக்கொண்டுள்ளது.

இந்த காரின் பேஸ் வேரியண்ட் தற்போது ரூ.3.4 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், ஸ்பார்க் பேஸ் வேரியண்ட்டின் விலையை ரூ.2.69 லட்சமாக ஜிஎம் குறைத்துள்ளது.

மேலும், இந்த விலை குறைப்பு சலுகை முதலில் புக்கிங் செய்யப்படும் 250 கார்களுக்கு மட்டுமே என ஜிஎம் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
General motors has slashed the price of the Spark small car to just Rs.2.69 lakhs. The carmaker has gone on a marketing onslaught on electronic as well as print media to attract customers. Chevrolet's entry level car has lost some sheen after the launch of the new Beat which is now available with both diesel and petrol engines.The Spark has several features that are not available in its closest competitor, the Maruti Suzuki Alto. The current offer of Rs.2.69 lakhs will make the Spark even more attractive than the Alto. The Spark comes with spacious interiors, peppy looks and a fairly powerful engine. The spark offers a fuel economy of 18kmpl, great handling and little maintenance costs.
Story first published: Wednesday, August 31, 2011, 10:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X