உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க மத்திய அரசு மறுப்பு

Imported Cars
டெல்லி: இறக்குமதி செய்யப்படும் கார் உதிரிபாகங்களுக்கான வரி உயர்வை திரும்பபெறுமாறு, வெளிநாட்டு கார் நிறுவனங்கள் மீண்டும் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.

இந்தியாவில் கார் உற்பத்தி செய்து வரும் பல்வேறு வெளிநாட்டு கார் நிறுவனங்கள், தங்களது சொந்த நாட்டிலுள்ள தாய் தொழிற்சாலைகளிலிருந்து எஞ்சின், கியர் பாக்ஸ் உள்ளிட்ட முக்கிய உதிரிபாகங்களை இறக்குமதி செய்து இங்கு கார்களை அசெம்பிள் செய்து வருகின்றன.

கார்களை அசெம்பிள் செய்வதற்காக இறக்குமதி செய்யப்படும் முக்கிய உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரி கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியது. முன்பு 10 சதவீதமாக இருந்த இறக்குமதி வரி 60 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.

இதற்கு பல்வேறு வெளிநாட்டு கார் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்தன. இதையடுத்து, உயர்த்தப்பட்ட இறக்குமதி வரியை மத்திய அரசு 30 சதவீதமாக குறைத்தது.

இந்த நிலையில், உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரியை மீண்டும் பழையபடி 10 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும் என ஐரோப்பிய கார் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு மீண்டும் கோரிக்கை விடுத்தன.

இந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. மேலும், இறக்குமதி வரியை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

இதுகுறித்து மத்திய நிதித்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில்," மத்திய அரசுக்கு ஏற்கனவே பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதை சரிசெய்ய வரிஉயர்வு அவசியமாக இருக்கிறது. எனவே, கார் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரியை குறைப்பதற்கான வாய்ப்பு இல்லை," என்று கூறினார்.

Most Read Articles
English summary
The Indian government has rejected the fresh appeal to take back the contrasting custom duty norms for assembled cars in India, said sources. It is worth mentioning that European Union earlier raised the demand of duty rollback on cars assembled in India and now German Chancellor also requested the same while visiting India.
Story first published: Saturday, June 18, 2011, 10:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X