குஜராத்துக்கு படையெடுக்கும் வாகன நிறுவனங்கள்

Audi Showroom
டெல்லி: நாட்டின் சொகுசு கார் விற்பனையில் குஜராத் மாநிலம் அதீத வளர்ச்சி பெற்று வருவதால் பல முன்னணி வெளிநாட்டு கார் நிறுவனங்கள் குஜராத்தில் ஷோரூம்களை திறக்க ஆர்வம் காட்டி வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குஜராத்தில் ஆண்டுக்கு 100 சொகுசு கார்கள் விற்பதே பெரிய விஷயம். ஆனால், தற்போது அங்கு நிலைமை தலைகீழாகி உள்ளது. கடந்த ஆண்டு குஜராத் மார்க்கெட்டில் 1,000 சொகுசு கார்கள் விற்பனையாகியுள்ளது.

இதனால், பல முன்னணி சொகுசு கார் நிறுவனங்கள் குஜராத்தில் ஷோரூம்களை அமைக்கவும், புதிய தொழிற்சாலைகளை கட்டுவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

காந்திநகர்-சர்கெஜ் இடையிலான எஸ்.ஜி நெடுஞ்சாலையில் ஏற்கனவே பிஎம்டபிள்யூ, ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்களின் கார் ஷோரூம்கள் இருக்கின்றன.

இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் கீழ் இயங்கும் பிரிட்டனை சேர்ந்த லேண்ட் ரோவர் மற்றும் ஜாகுவார் நிறுவனங்கள் எஸ்.ஜி. நெடுஞ்சாலையில் கார் ஷோரூம்களை திறக்க உள்ளன.

இதேபோன்று, போர்ச்சே கார் நிறுவனமும், இருசக்கர வாகன தயாரிப்பில் புகழ்பெற்ற ஹார்லி டேவிட்சன் நிறுவனமும் எஸ்.ஜி. நெடுஞ்சாலையில் ஷோரூம்களை திறக்க முடிவு செய்துள்ளன.

ஆடி இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி அனில் சத்வால் கூறுகையில்," குஜராத்தில் சொகுசு கார் விற்பனை வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு நாங்கள் மட்டும் 300 கார்களை விற்பனை செய்துள்ளோம்.

இதனால், சூரத்திலும் புதிய ஷோரூமை திறக்க உள்ளோம். சொகுசு கார்களுக்கு இங்கு நல்ல வரவேற்பு இருப்பதால், மேலும் ஒரு புதிய ஷோரூமை திறக்க முடிவு செய்துள்ளோம்," என்றார்.

Most Read Articles
English summary
Gujarat is on its way of becoming India’s auto hub as world’s major luxury car makers are targeting the state for manufacturing their facilities in the coming time. The premium car brand from all over the globe like Harley-Davidson, Porsche, Jaguar and Land Rover are eyeing to build up their showrooms in next few months on the booming route Sarkhej-Gandhinagar Highway or S.G. Road.
Story first published: Sunday, June 12, 2011, 10:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X