தீபாவளிக்கு முன்னதாகவே ஹூண்டாய்- 800 அறிமுகம்?

Hyundai ha 800
சென்னை: அதிக மைலேஜ் மற்றும் குறைந்த விலைகொண்ட தனது 800சிசி குட்டி காரை தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

நாட்டின் கார் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் ஹூண்டாய் நிறுவனம் எச்ஏ என்ற குறியீட்டு பெயரில் குட்டி காரை வடிவமைத்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கட்ட சோதனைஓட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ள இந்த கார் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஹூண்டாய் விற்பனையில் முன்னிலை வகிக்கும் ஐ-10 காருக்கும் குறைந்த விலையில் வரும் இந்த கார் அதிக மைலேஜ் கொடுக்கும் 800சிசி திறன் கொண்ட எஞ்சினுடன் வர இருக்கிறது.

ஆல்ட்டோ, ஸ்பார்க் ரகத்தில் வர இருக்கும் இந்த காரின் எஞ்சின் மட்டும்தான் குறைந்த சிசி கொண்டது. மற்றபடி, டாப்எண்ட் மாடல்களின் வசதிகளுடன் வர இருக்கிறது. இதில், ஏசி மற்றும் பவர் ஸ்டீயரிங் ஸ்டாண்டர்டு அம்சங்களாக வருகிறது.

v-வடிவ கன்சோலுடன் வரும் இந்த காரின் ஸ்டீரியோ சிஸ்டம் எம்பி-3 சிடியை சப்போர்ட் செய்யும். யுஎஸ்பி கனெக்ட்டிவிட்டி வசதியும் இருக்கும். உள்பக்க பாகங்களின் தரமும் நிரந்தரமாக இருக்கும்.

முன்பக்கம் பவர் விண்டோஸ் வசதியும், பின்பக்கம் மேனுவல் விண்டோஸ் கொண்டதாக இருக்கும். நானோ காரில் இருப்பது போன்று முன்பக்க கண்ணாடியில் இரண்டு வைப்பர்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

மேலும், ஹூண்டாயின் சமீபத்திய புளூயிடிக் வடிவமைப்பில் வரும் இந்த காரின் வெளிப்புற தோற்றமும் அசத்தும் வகையில் இருக்கும். இலகு எடை கொண்ட காராக வடிவமைக்கப்பட்டுள்ளதால், லிட்டருக்கு கண்டிப்பாக 20கிமீ.,க்கு மேல் செல்லும் என்று தெரிகிறது.

வரும் அக்டோபர் முதல் வாரத்தில் இந்த காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள ஹூண்டாய், செப்டம்பரில் உற்பத்தியையும் துவங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் மாருதி தனது 800 காரை மேம்படுத்தி களமிறக்க இருக்கும் நிலையில், ஹூண்டாயும் தனது 800 காரை களமிறக்குவது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
English summary
Hyundai has been readying its 800 CC small car Hyundai HA aka Hyundai 800 right from concept to a ready vehicle for past two years or so. With numerous R&D hours and brains behind the development of the Hyundai HA, the car is quite close to its official launch before Diwali. The Hyundai HA is expected to go on production in September 2011 and an official launch is expected in early October 2011. The launch date has not been finalized at this moment. The Hyundai HA will be a small car placed below Hyundai Santro price segment and will be powered by a small and fuel efficient 800 CC Engine. The fit and finish of the Hyundai 800 is excepted to be as good as Hyundai i10 with some cut on the gadgetry.
Story first published: Wednesday, August 17, 2011, 11:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X